Pugazh Video : தன் காதலியுடன் இருக்கும் வீடியோ வெளியிட்ட புகழ்...ரொமான்டிக்கில் வேற லெவல் ஆக்டிங்...

Published : Apr 10, 2022, 11:19 AM IST
Pugazh Video : தன் காதலியுடன் இருக்கும் வீடியோ வெளியிட்ட புகழ்...ரொமான்டிக்கில் வேற லெவல் ஆக்டிங்...

சுருக்கம்

Pugazh Video : ''குக் வித் கோமாளி" புகழ், தற்போது தனது வருங்கால மனைவியுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்து ரொமான்டிக்  வீடியோ வெளியிட்டுள்ளார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் புகழ், விஜய் டிவி-யில்  2016-ஆம் ஆண்டு ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை துவங்கினார். 

''குக் வித் கோமாளி" புகழ்:

இதையடுத்து, ''குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் அவரின் ரொமான்டிக் நகைச்சுவை இளசுகளை கொள்ளை கொண்டது. இதையடுத்து, அவர் எங்கு சென்றாலும் ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு கொண்டாடுவார்கள்.

’காமெடி ராஜா கலக்கல் ராணி’:

அதன் பிறகு, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதையடுத்து புகழ், அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

குக் வித் கோமாளி சீசன் 3:

இதைத்தொடர்ந்து, தற்போது விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3- வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதில், புகழ் படத்தில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து செல்கிறார்.

புகழ் தனது வருங்கால மனைவியுடன் ரொமான்டிக் வீடியோ:

புகழ், சமீபத்தில் தன்னுடைய காதலியின் பிறந்த நாள் விழாவை தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கிராண்டாக ஹோட்டலில் கொண்டாடியிருந்தார். அந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை  புகழ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அத்துடன் கடந்த 5 வருடங்களாக எங்களுடைய காதல் கதை தொடர்வதாக கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது தனது வருங்கால மனைவியுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்து ரொமான்டிக்  வீடியோ வெளியிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!