மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!

By Raghupati R  |  First Published Sep 10, 2022, 10:36 PM IST

ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அடிக்கடி நடைபெறுகிறது.


எவ்வளவு விலையுயர்ந்த போனாக இருந்தாலும், ஒரு சில தவறுகளால் அது வெடித்துவிடுகிறது. சில நேரங்களில் இது நிறுவனத்தின் தவறாக இருந்தாலும், பயனர்களின் தவறுகளாலும் இது  ஏற்படுகிறது. டெல்லி, என்சிஆர் பகுதியில் ரெட்மி நிறுவனத்தின் 6ஏ ஸ்மார்ட்போன் வெடித்து ஒரு பெண் இறந்ததாக கூறப்படுகிறது. 

பிரபல யூடியூபர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.  ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்த இந்த யூடியூபரின் அத்தை, இரவு தூங்கும் போது ரெட்மி 6a மொபைல் போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்திருந்தார். அந்த ஸ்மார்ட்போன் வெடித்து அவரது உயிரைப் பறித்ததாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

யூடியூபர் வெளியிட்டுள்ள இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த ரெட்மி (Xiaomi) இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.எம்டி டாக் ஒய்டி எனப்படும் யூடியூபர், பேட்டரி வெடித்ததால் பயனாளர் உயிரிழந்ததாகக் கூறி, ஸ்மார்ட்போனின் தற்போதைய நிலை குறித்த படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அதில், முன் பேனல் முழுவதுமாக வளைந்து குப்பையில் போடப்பட்ட நிலையில், பின் பேனல் ஸ்மார்ட்போனின் பேட்டரி வெடித்துள்ளது. அந்த ட்வீட்டில் அந்தப் பெண்ணின் படமும் உள்ளது. அதில் அவர் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், வணக்கம் நேற்று இரவு என் அத்தை  இறந்து கிடந்தார். அவர் Redmi 6A ஐ பயன்படுத்தினார். அவர் தூங்குவதற்கு முன்பு போனைத் தலையணைப் பக்கத்தில் தன் முகத்தின் அருகே வைத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவருடைய தொலைபேசி வெடித்தது. இதற்கு நிறுவனமே பொறுப்பு’ என்று பதிவிட்டுள்ளார். ஸ்மார்ட்போன் வெடித்து பொதுமக்களில் சிலர் காயம் அடைந்த சம்பவங்கள் இருந்தாலும், ஸ்மார்ட்போன் வெடித்து ஒருவர் பலியாகிய சம்பவம் இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

click me!