'நாங்களும் ஆன்லைன் ஷாப்பிங் தளம் தான்' போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் பரிதாப நிலையில் Tata Cliq

By Raghupati R  |  First Published Sep 10, 2022, 9:30 PM IST

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் வரிசையில் டாட்டா நிறுவனத்தின் Tata Cliq என்ற தளமும் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களை கவர முடியாமல், லாபம் பார்க்க முடியாமல், விற்பனையை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


டாட்டா நிறுவனத்தின் ஓர் அங்கமாக Tata Cliq ஆன்லைன் ஷாப்பிங் தளம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இருந்தாலும், விளம்பரங்கள் சலுகைகள் என அறிவித்து படிப்படியாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 

Tap to resize

Latest Videos

மேலும், டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் என அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக பல்வேறு பொருட்களை விற்கத்தொடங்கின. சில நேரங்களில் வேறு எங்கும் கிடைக்காத அளவில், குறைந்த விலையில் ஹெட்போன்கள், ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தன.  இந்த நிலையில், தற்போது டாட்டா நிறுவனத்தின் tata cliq இணையதளத்தில் இருந்து பல்வேறு பிரிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!

குறிப்பாக முன்பு இருந்த எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவையே அகற்றப்பட்டுள்ளது.   போதிய அளவில் விளம்பரங்கள் இல்லாததாலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இணையதளத்தின் தோற்றம் இல்லாததாலும் டாட்டா கிளிக் தற்போது மந்த நிலையில் உள்ளது. வாடிக்கையாளர் சேவையும் எதிர்பார்த்த அளவில் இல்லை. 

மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

ஒட்டு மொத்தமாக வெறும் பெயருக்காக, நாங்களும் ஆன்லைன் ஷாப்பிங் சைட் தான் என்று சொல்லும் அளவிற்கு டாட்டா கிளிக் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் கிளிக் எப்பிக் டேஸ் என்று சிறப்பு விற்பனை செய்தது, இருப்பினும் போதிய வரவேற்பை பெறவில்லை.  எகானமிக் டைமஸ் வெளியிட்ட செய்தியின்படி, கடந்த 2021 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், இந்த 2022 ஆண்டில் டாட்டா கிளிக் நிறுவனத்தின் நஷ்டம் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

click me!