Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் 2022 தேதி அறிவிப்பு!

By Raghupati R  |  First Published Sep 10, 2022, 9:15 PM IST

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆன்லைன் ஷாப்பிங்கில் முதலிடத்தில் அமேசான் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில், மற்ற எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும். இதனால், ஆன்லைனில் பெரிய பட்ஜெட்டில் பொருட்களை வாங்க விற்பனையாளர்கள், அமேசானின் இந்த சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், தற்போது அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் சாம்சங், ஷாவ்மி, ஒன்பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன், எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி எதிர்பார்க்கலாம். 

மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!

குறிப்பாக சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 11 பிரைம் 5ஜி, iQoo Z6 லைட் 5ஜி, ஐபோன் 14 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை இருப்பதாக அமேசான் நிறுவனம் சூட்சுமாக தெரிவித்துள்ளது.   மேலும், லேப்டாப்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 75 சதவீதம் வரையில் ஆஃபர் இருக்கும் என்று டெக் செய்தி தளங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

இவை தவிர குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் உண்டு.  தற்போது கிக் ஸ்டார்ட்டர் டீல் என்ற ஆஃபர் விற்பனை நடந்து வருகிறது. இதில் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

click me!