WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

By Thanalakshmi VFirst Published Sep 10, 2022, 3:45 PM IST
Highlights

வாட்ஸ்அப் நிறுவனம், தேதி வாரியாக மெசேஜ்களைப் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 
 

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தேடும் அம்சத்தில் ஒரு மேம்பட்ட தேடல் வசதியைக் கொண்டு வருவதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது. அதன்படி, பயனர்கள் தாங்கள் அனுப்பிய பழைய மெசேஜ்களை ஸ்கோரல் செய்து பார்க்கத் தேவையில்லை. அதற்குப் நேரடியாக அந்த குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் எண்டர் செய்த தேதியில், நாம் அனுப்பிய மெசேஜ்களை உடனடியாகப் பார்த்துக் கொள்ளலாம்.

இது குறித்து வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன் தரப்பில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த அம்சத்தை தற்போது iOS தளத்திற்கான வாட்ஸ்அப்பில் சோதனை நடந்து வருகிறது. மேலும், விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் இதே அம்சம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க:அட்டகாசமான வசதிகளுடன் வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2.. முன்பதிவு இன்று தொடக்கம்.!

தற்போது, வாட்ஸ்அப் தேடல் வசதிகளில், பெயரையோ, நம்பரையோ எண்டர் செய்தால், அந்த நம்பர், பெயர் இருக்கும் மெசேஜ்கள் மட்டும் காட்டப்படும். இனி, தேதியை எண்டர் செய்து மெசேஜ்களைப் பார்க்க முடியும் என்பதால், அந்த தேதியில் உள்ள பிற மெசேஜ்களையும் நம்மால் பார்க்க முடியும். இதற்காக வாட்ஸ்ப்அப்பில் Search Box அருகில் ஒரு காலண்டர் ஐகானைக் கொண்டு வரப்படுகிறது. 

ஒரு பயனர் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்த பிறகு, சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இது குறித்து புகாரளிக்கப்பட்ட அடுத்த இரண்டு நாளில், தேடல் அம்சத்தை மேம்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.


மேலும் படிக்க:விபரீதம் அறியாமல் தலையணைக்கு அடியில் ஸ்மார்ட்போன் வைத்துவிட்டு தூங்கினால் இப்படி தான் ஆகும்!

click me!