விபரீதம் அறியாமல் தலையணைக்கு அடியில் ஸ்மார்ட்போன் வைத்துவிட்டு தூங்கினால் இப்படி தான் ஆகும்!

By Thanalakshmi V  |  First Published Sep 10, 2022, 2:55 PM IST

ஸ்மார்ட்போன் என்பது நமது உடலில் ஒரு உறுப்பு போலவே ஆகிவிட்டது. செல்போன் இல்லை என்றால், ஒரு கை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். அதிலும் பெரும்பாலானோர் இரவில் உறங்கும் போதும் கூட ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டு, வீடியோஸ் பார்த்துவிட்டு, ஸ்மார்ட்போனையும் தலைக்கு அருகில் வைத்துக் கொண்டே தான் தூங்குகிறார்கள். இவ்வாறு உறங்கும் போது ஏற்படும் பல விளைவுகள், பக்கவிளைவுகள், பலருக்கும் தெரியாது. 
 
மேலும் படிக்க:வட்டிக்கு குட்டி போடும் கடன் செயலிகளுக்கு ஆப்பு.. மத்திய அரசு அதிரடி..!

Tap to resize

Latest Videos

ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் அலைக்கதிர்கள்:

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமானது நமது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அதில் குறிப்பாக தூங்கும் போது ஸ்மார்ட்போனையும் தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு படுத்தால், உங்கள் மூளையின் செல்லுலார் அளவையும் குறைக்கும். இதனால், வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் ஏற்படும்.

அதிக சூடு, நெருப்புக்கு வழிவகுக்கும்: 

அதிக சூடு காரணமாக ஸ்மார்ட்போன் வெடிக்கும் செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். பல பேர் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜில் போட்டுவிட்டு, முழு சார்ஜ் ஆனபின்பும் கூட எடுக்காமல், காலை எழுந்ததும் தான் சார்ஜில் இருந்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வது ஆபத்தானவை. 

மேலும் படிக்க:அட்டகாசமான வசதிகளுடன் வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2.. முன்பதிவு இன்று தொடக்கம்.!

அதே போல், தலையணைக்கு அருகில் ஸ்மார்ட்போனை வைக்கும் போதும் அதிக சூடு ஏற்படும், போதாக்குறைக்கு, அதன் மேலயே படுக்கும் போது, ஸ்மார்ட்போன் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாகவும் ஸ்மார்ட்போனில் வெடிக்கும் தன்மை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
 
click me!