ஆப்பிள் நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ஏபாட்ஸ் ப்ரோ 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் H2 பிராசஸர் இரு மடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டரான்ஸ்பரன்சி மோட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது தோற்றத்தில் முந்தைய மாடலை போன்று காட்சி அளித்தாலும், உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ஏபாட்ஸ் ப்ரோ 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் H2 பிராசஸர் இரு மடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டரான்ஸ்பரன்சி மோட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜி் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டுள்ளது.
undefined
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் விலை ரூ. 26 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று 9ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை 23ம் தேதி துவங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்
ஹை டைனமிக் ரேஞ்ச் ஆம்பிபயர் கொண்ட ஆப்பிள் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் புளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
தனித்துவம் மிக்க ஸ்பெஷல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் இன் கேஸ் ஸ்பீக்கர், கான்வெர்சேஷன் பூஸ்ட், பிரெசிஷன் பைண்டிங் வழங்கப்பட்டுள்ளது.
ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் ஆப்பிள் H2 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் கேசில் ஆப்பிள் யு1 சிப் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பிளே பேக் டைம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் மேக்சேப் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்கப்படுகிறது.
ஐந்து நிமிட சார்ஜில் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.