ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாத அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்ற கடன் செயலிகளை வொயிட்லிஸ்ட் எடுக்கவும், இந்த லிஸ்டில் இல்லாத கடன் செயலிகளை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெறாத அனைத்து கடன் செயலிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு இணையதள செயலிகள் மூலமாக சட்ட விரோத கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவில் கட்டுபாடுகள் இல்லாத காரணத்தால் பணம் தேவைப்படும் நபர்கள் உடனடியாக இதுபோன்ற செயலிகளை தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க;- 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் வோடபோன், ஐடியா..!
பணத்தை திரும்ப செலுத்தும் பொழுது அளவுக்கு அதிகமான வட்டி செலுத்தக்கூறி கட்டாயப்படுத்துவது, பணம் செலுத்த முடியாத பட்சத்தில் அவர்கள் தனிப்பட்ட அந்தரங்க விவகாரங்களைக் கூறி மிரட்டல் விடுவது, குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பது இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் இந்த செயலிகள் ஈடுபடுகின்றன. அண்மை காலமாக இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலரும் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டவிரோத கடன் செயலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார். இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அரசு உயர்மட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டவிரோத கடன் செயலிகள் பயன்படுத்தும் பினாமி வங்கிக் கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாத அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்ற கடன் செயலிகளை வொயிட்லிஸ்ட் எடுக்கவும், இந்த லிஸ்டில் இல்லாத கடன் செயலிகளை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது. இதுபோன்ற சட்டவிரோத கடன் செயலிகளை நடத்தும் தனியார் நிறுவனங்களையும் தடை செய்ய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அட்டகாசமான ஸ்டைலுடன் லேப்டாப்களை அறிமுகப்படுத்திய நோக்கியா