150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் வோடபோன், ஐடியா..!

By vinoth kumar  |  First Published Sep 9, 2022, 1:14 PM IST

இந்திய தொலைத் தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ.399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்படும்.

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்து இருக்கிறது.

இந்திய தொலைத் தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ.399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் சலுகை ஆகும். இந்த சலுகை புதிதாக போஸ்ட் பெயிட் சிம் வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இது எண்ட்ரி லெவல் போஸ்ட் பெயிட் சலுகை ஆகும். ரூ.399 போஸ்ட் பெயிட் சலுகையில் 40 ஜிபி டேட்டா, ஆன்லைனில் சிம் வாங்குவோருக்கு 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் 200 ஜிபி வரை டேட்டா லோல் ஓவர் சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விஐ மூவிஸ் மற்றும் டிவி செயலியின் விஐபி சந்தா, ஆறு மாதத்திற்கு விளம்பரம் இல்லா ஹங்காமா மியூசிக், ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. விஐ போஸ்ட் பெயிட் ரூ.399 சலுகையில் வரிகள் சேர்க்கப்படவில்லை.

click me!