Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!

By vinoth kumar  |  First Published Sep 9, 2022, 1:01 PM IST

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நாளுக்கு நாள் தங்கள் புதிய படைப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் ரியல்மி நிறுவனம் தங்கள் புதிய படைப்பான ரியல்மி சி33 மாடல் செல்போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. 


ரியல்மி சி33 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. ஏற்கனவே ரியல்மி சி 31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய சி 33 மாடல் அறிமுகமாகி உள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நாளுக்கு நாள் தங்கள் புதிய படைப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் ரியல்மி நிறுவனம் தங்கள் புதிய படைப்பான ரியல்மி சி33 மாடல் செல்போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரியல்மி சி 31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய சி33 மாடல் அறிமுகமாகி உள்ளது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி.பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 5 எம்பி செல்பி கேமரா, யுனிசாக் டி612 பிராசசர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Apple iPhone 14, iPhone 14 Pro அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்டிராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ எஸ் டிசன் ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 0.3எம்பி (VGA) டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 8.3 மில்லிமீட்டர் மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

6.52 இன்ச்  1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் யுனிசாக் டி612 பிராசசர், மாலி G57 GPU, 

3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டுயல் சிம் ஸ்லாட், 

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ எஜ் எடிசன்  

50 MP பிரைமரி கேமரா

0.3 MP (VGP) டெப்த் கேமரா

5 MP செல்பி கேமரா

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ ,

கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைபை, 

ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் அக்வா புளூ, நைட் சீ மற்றும் சேண்டி கோல்டு என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8 ஆயிரத்து 999 மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி சி33 ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 12ம் தேதி பிளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆப்லைனில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- Facebook : ஃபேஸ்புக்கில் இனி இந்த வசதி கிடையாதாம்! மெட்டா அதிரடி

click me!