Twitter Update: வாட்ஸ் அப்பில் ஷேர் ஆகும் டுவிட்டர் அப்டேட்!!

By Narendran S  |  First Published Sep 8, 2022, 10:54 PM IST

டுவிட்டரில் பதிவாகும் டுவிட்களை எளிதாக வாட்ஸ் அப்பிற்கு பகிர்வதற்கான புதிய வசதியை கொண்டுவந்துள்ள டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


டுவிட்டரில் பதிவாகும் டுவிட்களை எளிதாக வாட்ஸ் அப்பிற்கு பகிர்வதற்கான புதிய வசதியை கொண்டுவந்துள்ள டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடங்கி நாட்டின் குடிமக்கள் வரை கோடிக்கணகான நபர்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக டுவிட்டர் இருந்து வருகிறது. இந்நிலையில் டுவிட்டரில் பதிவிடப்படும் புதிய டுவிட்களை எளிதாக வாட்ஸ் அப்பிற்கு பகிரும் வகையில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு டுவிட்டை பகிர வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஷேர் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் பகிரலாம் என்ற நிலை இருந்தது.

இதையும் படிங்க: வித் லவ் சிவசங்கரி டூ செந்திலின் சுட்டக்கதை.. சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிர்ச்சி ப்ளஸ் ஆப்பில் அறிமுகம்

Tap to resize

Latest Videos

ஆனால் தற்போது கமெண்ட், ரீடுவிட், லைக் என்ற பட்டன்களைத் தொடர்ந்து வாட்ஸ் அப் ஐகானும் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் ஐகானை கிளிக் செய்தவுடன் நாம் குறிப்பிட்டிருக்கும் டுவிட்டர் பதிவை எளிதில் வாட்ஸ் அப்பில் பகிர முடியும். இது தொடர்பாக டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஷிரிஷ் அந்தாரே தெரிவிக்கையில், ”டுவிட்டர் நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தான் இந்த வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷனை சோதனை முறையில் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக இது ஆண்டிராய்ட் அப்ளிகேஷன் மூலம் டுவிட்டரை பயன்படுத்தும் இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Apple iPhone 14, iPhone 14 Pro அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!

டுவிட்டுகள் டுவிட்டரைத் தாண்டி மற்ற சமூக ஊடகங்களுக்கும் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இது சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள டுவிட்டில் சோதனை அடிப்படையில் வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த கருத்துகளை பயனாளர்கள் பகிருமாறு குறிப்பிட்டுள்ளது. டுவிட்டர் இந்தியாவின் இந்த புதிய வசதிக்கு அதன் பயனாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

click me!