டுவிட்டரை வாங்காததற்கு மூன்றாம் உலகப்போர் தான் காரணம்... மஸ்க் புது விளக்கம்!!

Published : Sep 08, 2022, 10:13 PM IST
டுவிட்டரை வாங்காததற்கு மூன்றாம் உலகப்போர் தான் காரணம்... மஸ்க் புது விளக்கம்!!

சுருக்கம்

மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற அச்சத்தில் தான் டுவிட்டரை விலைக்கு வாங்கும் முடிவை கைவிட்டதாக எலான் மஸ்க் அனுப்பிய குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தையும், டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதனை பிறருக்கு விற்று லாபம் பார்ப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் தான் இந்த எலான் மஸ்க். உலகின் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தங்களும் தயார் செய்யப்பட்டன. ஆனால், டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த தரவுகளை தரமறுத்ததால் டுவிட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க: APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

முன்னதாக இந்த நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை எலான் மஸ்க் நிறைவேற்ற உத்தரவிடுமாறு டுவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. மேலும் இதனை செய்யத் தவறினால், ஒரு பில்லியன் டாலரை முறிவு கட்டணமாக அளிக்க உத்தரவிடுமாறு தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: Flipkart Hotels: இனி பிளிப்கார்ட் மூலமாகவே ஹோட்டல் புக் செய்யலாம்!!

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் 3ம் உலகப்போர் வரும் என்ற அச்சத்தில் டுவிட்டரை வாங்கவில்லை என எலான்மஸ்க் தெரிவித்ததாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேமாக பரவியது. தனது வங்கியாளர் மோர்கன் ஸ்டான்லி என்பவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய குறுஞ்செய்தியில், சில நாட்களுக்கு மட்டும் வேகத்தைக் குறைப்போம். நாளை புடின் பேச்சு மிகவும் முக்கியமானது. மூன்றாம் உலகப்போருக்குச் சென்றால் டுவிட்டரை வாங்குவதில் அர்த்தமில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பான உரையாடல் பதிவு முழுவதையும் ஆவணமாக தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!