Flipkart Hotels: இனி பிளிப்கார்ட் மூலமாகவே ஹோட்டல் புக் செய்யலாம்!!

By Narendran S  |  First Published Sep 8, 2022, 6:38 PM IST

முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது தங்கள் ஆப்பில் ஹோட்டல் புக்கிங் வசதியை கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது.


முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது தங்கள் ஆப்பில் ஹோட்டல் புக்கிங் வசதியை கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான பிளிப் கார்ட் தளத்தை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பொருட்களை தங்கள் வீடுகளில் இருந்தபடியே வாங்கி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தங்களது பெரும்பாலான ஷாப்பிங் வேலைகளை இணையதளம் வாயிலாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டிற்கே வந்து செல்போன் சரி செய்யும் நிறுவனம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது அடுத்த முயற்சியாக ஹோட்டல் புக்கிங்கில் கால்பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கடந்த ஓராண்டில் மட்டும் சுற்றுலாத் துறையானது 70% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக சுற்றுலாத் துறை 60% வளர்ச்சி அடைகிறது. அடுத்த காலாண்டு பண்டிகைகள் அதிகம் உள்ளதால் சுற்றுலா துறைக்கு மிகவும் நல்லகாலமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: 200 கோடி யூசர்களின் டேட்டா திருட்டு - பயனர்கள் அதிர்ச்சி

எனவே பிளிப்கார்ட் ஹோட்டல் புக்கிங் சேவை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மலிவான தொகையில் ஹோட்டல் புக்கில் செய்ய வழிவகை செய்யப்படும். பிளிப்கார்ட் மூலமாகவே வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களை புக் செய்து கொள்ளலாம். எங்கள் ஆப் மூலம் உள்ளூர் மற்றறும் சர்வதேச அளவில் 3 லட்சம் ஹோட்டல்களை வாடிக்கையாளர்கள் புக் செய்து கொள்ளலாம். ஹோட்டல் புக்கிங் சேவையை தொடங்குவதில் பிளிப்கார்ட் மிகவும் ஆவலுடன் இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!