TikTok hacked: 200 கோடி யூசர்களின் டேட்டா திருட்டு - பயனர்கள் அதிர்ச்சி

By Dinesh TGFirst Published Sep 8, 2022, 1:50 PM IST
Highlights

சர்வரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு  காரணமாக டிக்டாக் ஸ்டோரேஜ் ஆக்சஸ் ஹேக்கர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் இதன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

இணைய பொழுதுபோக்கு உலகில் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒரு ஆப் தான் டிக் டாக், இந்திய செயலியை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்திய ஒருசில இன்று சினிமா பிரபலமாகவும் வளர்ந்துள்ளனர். சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவில் இந்த ஆப் பிரபலப்படுத்து வந்தது. இந்நிலையில் இந்த செயலி  இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாகக் கூறி இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டது.

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல நாடுகளில் இந்த ஆப் செயல்பாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சர்வரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக் டாக் ஸ்டோரேஜ் ஆக்சஸ் ஹேக்கர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பீஹைவ் சைபர் செக்யூரிட்டி என்ற இணைய பாதுகாப்பு தளம் “டிக்டாக்கில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் டிக்டாக்கில் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுடைய டிக் டாக் பாஸ்வேர்டை மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 14 போனுக்குப் போட்டியாக களமிறங்கும் Pixel 7
 

மைக்ரோசாப்ட் 365 டிபெண்டர் ஆய்வுக்குழுவினர் ஆண்டிராய்டு டிக் டாக் பயனர்கள் ஒரு தீங்கிழைக்கும் லிங்கை கிளிக் செய்தாலே, அவர்களுடைய டிக் டாக் வீடியோக்கள் முதல் தனிப்பட்ட தகவல்கள் வரை அனைத்துமே ஹேக்கர்கள் கைப்பற்ற அனுமதி அளிக்கும். இந்நிலையில் டேட்டா திருட்டு டிக் டாக்கின் அலட்சியத்தால் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர். அலிபாபா கிளவுட் ஸ்டோரேஜில் அனைவராலும் எளிதாக கண்டுபிடிக்கக் கூடிய ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்தி டிக் டாக் செயலி தனது டேட்டாவ சேமித்து வைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த ஒரு சோர்ஸ்கோர்ட் வெளியாகி உள்ளது.

வித் லவ் சிவசங்கரி டூ செந்திலின் சுட்டக்கதை.. சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிர்ச்சி ப்ளஸ் ஆப்பில் அறிமுகம்
 

வெளியான சோர்ஸ் கோர்டுக்கும் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டிக் டாக் பாதுகாப்புக் குழுவினர் இதனை ஆய்வு செய்து உறுதிபடுத்தி உள்ளதாக அந்நிறுவனம் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

click me!