ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், கூகுள் நிறுவனமும் அக்டோபர் 16 ஆம் தேதி Pixel 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று (செப்.7) இரவு 10.30 மணிக்கு அறிமுகமாகயுள்ளது. கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில், iPhone 14 விலை இந்திய மதிப்பில் 63628 ரூபாய் என்றும், iPhone 14 Plus ஸ்மார்ட்போனின் விலை 71591 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்பிள் தனது ஐபோனை அறிமுகம் செய்த அதே நாளில், கூகுள் நிறுவனமும் பிக்சல் 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 6 ஆம் தேதி கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.
ஏற்கெனவே பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. விலை, கூடுதல் சிறப்பம்சங்கள் மட்டுமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆண்ட்ராய்டு 13, அலுமினியம் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Apple iPhone 14, iPhone 14 Pro அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!
இதற்கு முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போனை காட்டிலும், பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ போனில் அதிகப்படியான திரை ஒளிர்வு வெளிச்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் முன்பக்க, பின்பக்க கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்டு செய்யும் அம்சம் இருக்கலாம்.
இதே போல், பிக்சல் வாட்ச்சில் LTE அம்சம் இருக்கும் பட்சத்தில், வாட்ச்சிலேய ஹெட்செட்டை இணைத்து, வாட்ச்சிலேயே கால் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு நானோ போன் போல பிக்சல் வாட்ச் செயல்படும் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.