Apple iPhone 14, iPhone 14 Pro அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!

By Raghupati R  |  First Published Sep 7, 2022, 7:51 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று ( செப். 7) அறிமுகமாக உள்ளது. அந்த வகையில், 14 சீரிஸின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 


ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. கலிஃபோர்னியாவில் நடைபெறும் இந்த அறிமுக விழா நேரலை வாடிக்கையாளர்கள் காணலாம். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 14 அறிமுக விழா நேரலை செய்யப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்வில் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ,  ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் 8 ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வழக்கம் போல், ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, அதுகுறித்த விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு.. Google Chrome ப்ரவுசரில் ஆபத்து, உடனே அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தல்!

அதன்படி, ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் விலை 799 அமெரிக்க டாலர், ஐபோன் 14 ப்ரோவின் விலை 1099 அமெரிக்க டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது இந்திய சந்தைகளில் வரும் போது, கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம். ஐபோன் 14 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48MP கேமரா, A16 பயோனிக் சிப்செட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஐபோன் 14 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மற்றபடி முழுமையான தகவல்கள் அனைத்தும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. உஷாாாார்! ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

click me!