வித் லவ் சிவசங்கரி டூ செந்திலின் சுட்டக்கதை.. சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிர்ச்சி ப்ளஸ் ஆப்பில் அறிமுகம்

By Raghupati RFirst Published Sep 7, 2022, 9:11 PM IST
Highlights

நகரத்தை மையமாக கொண்ட இந்தியாவின் நம்பர் ஒன் இசை மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான மிர்ச்சி புதிதாக மிர்ச்சி ப்ளஸ் என்ற ஆப்-பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரபல ரேடியோ ஜாக்கிகளான சிவசங்கரி, செந்தில் ஆகியோரை வைத்து வித் லவ் சிவசங்கரி மற்றும் செந்திலின் சுட்டக்கதை என்ற இரு நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

காதல், ஏமாற்றம், துரோகம் உள்ளிட்ட வாழ்வின் பல சிக்கல்களை உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையாகவும் ஆய்ந்தறியப்படுவதால் இந்நிகழ்ச்சிகள் ஏராளமான நேயர்களை தன்பால் ஈர்த்துள்ளது. குறிப்பாக காதல் சிக்கல்கள், திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனஉளைச்சல்கள் ஆகியவை வித் லவ் சிவசங்கரி நிகழ்ச்சியிலும், உண்மை சம்பவங்கள், மனித குணாதிசயங்களால் ஏற்படும் விளைவுகள் என சுவரஸ்யமிக்க தகவல்களை செந்திலின் சுட்டக்கதை நிகழ்ச்சியிலும் பேசப்படுகிறது. 

இதேபோல லவ் நெக்டார் என்ற ஆடியோ நாவலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீனகால காதலை பிரதிபலிக்கும் இந்த நாவல் காதலர்களையும் தம்பதியினரையும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவைமிக்க சம்பவங்களை நினைவுகூரும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முப்பது பாகங்களைக் கொண்ட இந்த ஆடியோ நாவல் கேட்பவர்கள் கண்டிப்பாக தங்களின் காதல் அத்தியாயங்களை ஒருமுறை புரட்டிப்பார்ப்பார்கள். 

நேயர்கள் இந்த நிகழ்ச்சிகளை மிர்ச்சி ப்ளஸ் ஆப்-பில் மட்டுமே பிரத்யேகமாக கேட்கமுடியும்.  இந்த மூன்று நிகழ்ச்சிகள் குறித்து பேசிய மிர்ச்சி நிறுவனத்தின் நேஷனல் கன்டென்ட் ஹெட், இந்திரா ரங்கராஜன், பல்வேறு விதமான வித்தியாசமான கன்டென்ட் கொடுப்பதில் முன்னணி நிறுவனமான மிர்ச்சி, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதற்காக புதிய விஷயங்களை எப்போதும் புகுத்திக்கொண்டே இருக்கிறது. 

தமிழ் நேயர்களுக்கு பிடிக்கவேண்டும் என்பதை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிர்ச்சி அறிமுகம் செய்கிறது. மிர்ச்சியின் தயாரிப்பான மிர்ச்சி மியூசிக் அவார்ட், சன்டே சஸ்பென்ஸ், கிளப் மிர்ச்சி ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இப்போது, வித் லவ் சிவசங்கரி, செந்திலின் சுட்டகதை, லவ் நெக்டார் ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் மிர்ச்சி ப்ளஸ் ஆப்-பில் அறிமுகம் செய்திருக்கிறோம்” என்றார்.

click me!