தங்கள் நிறுவன செல்போன்களை வாடிக்கைளாளர்களின் வீட்டிற்கே சென்று சரிசெய்து கொடுக்கப் போவதாக லாவா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் விற்கப்படும் செல்போன் நிறுவனங்களில் லாவா நிறுவனம் முன்னணி நிறுவனமாக செல்யபட்டு வருகிறது. வர்த்தக உலகில் போட்டி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் லாவா நிறுவனம் "Service at Home" என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தங்கள் நிறுவன செல்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி சேவை மையத்தைத் தேடி அழைய வேண்டியதில்லை, நாங்களே உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து உங்கள் செல்போன்களை சரிசெய்து கொடுப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு செல்போனில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை சரிசெய்வதற்கு நாம் இருக்கும் பகுதியிலேயே பல்வேறு கடைகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் உண்மையான பொருள் விற்கப்படுகிறதா? போலியான பொருள்? விற்கப்படுகிறதா என்று நாம் கண்டுபிடிப்பது கடினம். அதே போன்று உண்மையான பொருட்கள் வேண்டும் என்றால் நிறுவனத்திடம் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். இதுபோன்ற உரிமம் பெற்ற கடைகள் மாவட்டத்திற்கு ஒன்றிண்டே உள்ளதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
TikTok hacked: 200 கோடி யூசர்களின் டேட்டா திருட்டு - பயனர்கள் அதிர்ச்சி
வாடிக்கையாளர்களின் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தான் லாவா நிறுவனம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் நாடு முழுவதும் 9 ஆயிரம் அஞ்சல் எண்களுக்கு (Pincode) இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கம், அதிகாரபூர்வ வாட்ஸ் அப் எண், தங்களுக்கான செல்பொன் பெட்டியில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த 2 மணி நேரத்தில் நிறுவனத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு, 48 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் தேவை சரி செய்ய முயற்சிக்கப்படும்.
iPhone 14 போனுக்குப் போட்டியாக களமிறங்கும் Pixel 7
முன்னதாக இந்த சேவை சிறிய அளவிலான மென்பொருள், தொழில்நுட்ப தேவைகளுக்கு மட்டும் வழங்கப்படும். பெரிய அளவிலான பிரச்சினைகளுக்கு செல்போன்கள் நிறுவனத்திற்கே கொண்டு செல்லப்பட்டு சரிசெய்யப்பட்ட பின்னர் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையில் வாடிக்கையாளரிடம் இருந்து செல்போனை பெற்று செல்வதற்கும், திரும்ப வழங்குவதற்கும் (Pickup, Drop) எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் லாவா நிறுவனத்தின் புதிய மாடல்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.