5ஜி போன்களை 10,000 ரூபாய்க்கு வழங்க வாய்ப்பில்லை.. சியோமி தலைவர்..!

By vinoth kumarFirst Published Sep 10, 2022, 11:23 AM IST
Highlights

ரியல்மி போன்ற பிராண்டுகள் 10 ஆயிரம் ரூபாய் பிரிவின் கீழ் செல்போன்களை வெளியிடுவதை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், அத்தகைய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட் போன்களை சியோமி எப்போது வெளியிடும் என்று கேட்கப்பட்டது. 

தற்போதைய சூழலில் 5 ஜி மொபைல்களை 10 ஆயிரம் ரூபாய்க்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சியோமி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டின் பெரு நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. சியோமி நிறுவனம் ஏற்கனவே 5ஜி போன்களை வெளியிட்டுள்ள நிலையில், 5ஜி சேவை நடைமுறைக்கு வந்த பின்னர் அதன் பயனாளர்களின் தேவைகளை அறிந்து சியோமி மேலும் பல செல்போன்களை வெளியிடும் என்று அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பண்டிகை காலம் துவங்கும் போது ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட் போன்களின் வரவு அதிகரிக்கத் துவங்கும். நாங்களும் பண்டிகைகால விற்பனைக்குத் தயாராகி வருகிறோம். பல்வேறு வகையான போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை வாங்கவே விரும்புவார்கள்.

ரியல்மி போன்ற பிராண்டுகள் 10 ஆயிரம் ரூபாய் பிரிவின் கீழ் செல்போன்களை வெளியிடுவதை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், அத்தகைய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட் போன்களை சியோமி எப்போது வெளியிடும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அது பொருளாதார அளவைப் பொறுத்தது. இந்த ஆண்டு இறுதியில் சிப்செட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.எனவே 10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட சிறிது காலம் ஆகலாம். தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை” என்று முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!