இந்தியாவில் அறிமுகமாகும் Redmi K50i… என்னென்ன அம்சங்கள் உள்ளன? விலை என்ன?

By Narendran S  |  First Published Jul 20, 2022, 6:30 PM IST

Redmi K50i இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று Redmi மொபைல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 


Redmi K50i இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று Redmi மொபைல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுக்குறித்து Redmi-இன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், நேரலை நிகழ்வின் போது ஸ்மார்ட்போன் வெளியிடப்படும். Redmi K50i தொடர் 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K20 தொடரின் அடுத்த சீரிஸ் ஆகும். 

இதையும் படிங்க: நத்திங் போன் (1) vs மோட்டோரோலா எட்ஜ் 30 - அம்சங்கள், விலை ஒப்பீடு.... எது மாஸ் தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

Redmi K50i மொபைலின் அம்சங்கள்: (கூறப்படுவது)

அறிமுகத்திற்கு முன்னதாக, Redmi K50i ஒரு MediaTek Dimenstiy 8100 SoC உடன் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் இந்த போன் வரும். முன் பக்கத்தில், ஃபோன் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடியுடன் FULL HD+ ரெசல்யூசன் டிஸ்ப்ளே 144Hz ரெப்ரஸ் ரேட்டை வழங்குகிறது.

இதையும் படிங்க: ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி.. இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள்...!

முன்பக்கத்தில், ஃபோன் கேமரா 64 மெகாபிக்சல் மெயின் வைட் ஆங்கிள் லென்ஸுடன் உள்ளது. பிரதான சென்சார் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் இணைக்கப்படும், இது அதிக பரப்பளவை காட்ட உதவுகிறது. 5G ஃபோன் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் வர வாய்ப்புள்ளது.

செல்ஃபி பிரியர்களுக்கு, போனில் 16 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இது வைட் போட்டோஸ் கிளிக் செய்யும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும் ஃபோனில் 4,400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது.  அதை 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் நிரப்ப முடியும்.

Redmi K50i விலை:

Redmi K50i இன் 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு விருப்பத்தின் விலை 24,000 முதல் ரூ.28,000 வரை இருக்கும். ஸ்டெல்த் பிளாக், குயிக் சில்வர் மற்றும் பாண்டம் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஜூலை 22 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!