சாதனங்களில் யு.எஸ்.பி. சி போர்ட்களை வழங்க ஐரோப்பிய யூனியன் தொழில்நுட்ப நிறுவனங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வலியுறுத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் லைட்னிங் போர்டிற்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி போன்ற மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கி இருக்கிறது. ஸ்மார்ட்போன் உள்பட பெரும்பாலான சாதனங்களில் யு.எஸ்.பி. சி போர்ட்களை வழங்க ஐரோப்பிய யூனியன் தொழில்நுட்ப நிறுவனங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வலியுறுத்தி வருகிறது.
யு.எஸ்.பி.சி ஐபோன்:
ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 2023-க்குள் ஆப்பிள் தனது ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கி விடும் என அவர் தெரிவித்து இருக்கிறார். எனினும், இது சாத்தியமாக ஐ.ஓ.எஸ். சப்போர்ட் மிகவும் முக்கியம் என அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
சார்ஜிங் கனெக்டர் இல்லாத ஐபோன் மாடல்களை ஆப்பிள் ஏற்கனவே உருவாக்கி சோதனை செய்து வந்தது. எனினும், இந்த மாடல்கள் தற்போதைக்கு வெளியாகாது என்றே தெரிகிறது.
முன்னதாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரையிலான விலை குறைப்பு மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்பட்டன.