ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டிற்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தள்ளுபடி அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டிற்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தள்ளுபடி அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் வழங்கப்படுகிறது.
ஐபோன் 13 128GB வேரியண்ட் தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் இந்தியா இ-ரிடெயில் விலையை விட இது ரூ. 10 ஆயிரம் குறைவு ஆகும். எக்சேன்ஜ் சலுகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரத்து 800 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் ஐபோன் 13 விலை ரூ. 59 ஆயிரத்து 100-க்கு கிடைக்கும்.
அதிரடி தள்ளுபடி:
ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 58 ஆயிரத்து 900-க்கு கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அல்லது மாத தவணை முறையில் வாங்கும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதே போன்று 256GB ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 10 ஆயிரத்து 410 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் போது ரூ. 10 ஆயிரத்து 800 வழங்கப்படுகிறது. இதையும் சேர்க்கும் போது ரூ. ஐபோன் 13 256GB மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 690 என மாறி விடும். ப்ளிப்கார்ட் தளத்தில் 256GB ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 16 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எக்சேன்ஜ் சலுகை:
அதன்படி இதன் விலை ரூ. 68 ஆயிரத்து 690 என மாறிவிடும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அல்லது மாத தவணை முறையில் வாங்கும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 13 512GB மாடல் வாங்குவோருக்கு அமேசான் தளத்தில் ரூ. 5 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 10 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 13 512GB விலை ரூ. 93 ஆயிரத்து 190 என மாறி விடும். ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஐபோன் வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 16 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 13 512GB விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி விடும்.