வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் மல்டி டிவைஸ் அம்சம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் தனது செயலியில் புதிதாக கம்பேனியன் மோட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் 2GB ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்களை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் உருவாகி வரும் கம்பேனியன் மோட் கொண்டு பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பல்வேறு சாதனங்களில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் மல்டி-டிவைஸ் அம்சம் கொண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டை போன் மற்றும் கணினியில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.
undefined
கம்பேனியன் மோட்:
இந்த அம்சம் கொண்டு ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லாத சமயங்களிலும் தொடர்ந்து கணினியில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். தற்போதைய புது அம்சம் கொண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பல்வேறு சாதனங்கள் அதாவது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களில் பயன்படுத்தலாம்.
கம்பேனியன் மோட் அம்சத்தை இரண்டாவது சாதனத்தில் மற்றொரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைத்தும் பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்யும் போது, ஏற்கனவே லாக் இன் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் அக்கவுண்ட் அந்த சாதனத்தில் இருந்து லாக் அவுட் செய்யப்பட்டு விடும். இவ்வாறு செய்யும் போது அனைத்து டேட்டாவும் காணாமல் போகிடும். கம்பேனியன் மோட் பயன்படுத்தும் முன் வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் செய்வது அவசியம் ஆகும்.
தற்போது வெளியாகி இருக்கும் கம்பேனியன் மோட் அம்சம் ஆரம்ப கால வளர்ச்சி பணிகளில் உள்ளது. இதன் காரணமாக இந்த அம்சம் பல்வேறு மாற்றங்களுடனோ அல்லது இதே பயன்பாடுகளுடனோ செயலியின் ஸ்டேபில் அப்டேட்டில் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது.
முந்தைய அப்டேட்:
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட புது அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டும் இன்றி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் தரவுகளின் அளவீடுகளை வாட்ஸ்அப் 2GB வரை அதிகரித்தது. ஏற்கனவே இதற்கான அளவு 100MB-யாக மட்டுமே இருந்து வந்தது. கடந்த மாதம் இந்த இரு அம்சங்களும் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் இவை வழங்கப்பட்டன.