ரூ. 151 ரிசார்ஜ் செய்தால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம் - ரிலையன்ஸ் ஜியோ அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published May 5, 2022, 5:00 PM IST

கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ. 151 சலுகையில் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதர சலுகைகளில் டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங், எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை ஒரு மாதம், இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று மாதங்களுக்கு கிடைக்கின்றன. இத்துடன் டேட்டா ஆட் ஆன் சலுகை, ஏற்கனவே உள்ள சலுகையின் வேலிடிட்டி வரை வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

புதிய சலுகை விவரங்கள்:

டேட்டா ஆட் ஆன் சலுகை ரூ. 151 - தினமும் 8GB டேட்டா, ஆக்டிவ் பிளான் நிறைவுபெறும் வரை வேலிடிட்டி

ஒரு மாதத்திற்கான சலுகை ரூ. 333 - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினசரி எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டி

இரண்டு மாதங்களுக்கான சலுகை ரூ. 583 - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினசரி எஸ்.எம்.எஸ். 56 நாட்கள் வேலிடிட்டி

மூன்று மாதங்களுக்கான சலுகை ரூ. 783 - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினசரி எஸ்.எம்.எஸ். 84 நாட்கள் வேலிடிட்டி
 
ஆக்டிவ் சலுகை:

ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்களுக்கான சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பலன்களை மூன்று மாதங்களுக்கு பெற, பயனர்கள் ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்து ஆக்டிவாக இருக்க வேண்டும். புதிய பிரீபெயிட் சலுகை விவரங்கள் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி லமற்றும் அனைத்து செக் பாயிண்ட்களிலும் கிடைக்கிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புதிய சலுகைகளில் அனைத்து தரவுகளையும் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவிலும் அனைத்து தரவுகளையும் பயன்படுத்த வழி செய்கிறது. எனினும், இவற்றை மொபைல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். 

click me!