விக்ரம் லேண்டரை எப்படிக் கண்டுபிடித்தார் சண்முக சுப்ரமணியன்..?

By Thiraviaraj RM  |  First Published Dec 3, 2019, 1:10 PM IST

நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின் படி விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தது.
 


மதுரை தமிழர் சண்முகசுப்ரமணியன் கொடுத்த ஆலோசனையால், 85 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர். களமிறங்கிய நிலவை ஆய்வு செய்யும் நாசா குழுவினர் தமிழர் சண்முகசுப்ரமணியத்திற்கு நன்றி தெரிவித்துள்ள்னர்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு, இந்தியவிண்வெளி ஆய்வு மையம் சார்பில், விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் கடந்த எண்பத்தைந்து நாட்களுக்கு முன் நிலவில் மென்முறையில் தரைஇறங்கியிருக்க வேண்டும். ஆனால் நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டரின் நிலை கேள்விக்குறியானது.

Tap to resize

Latest Videos

undefined

இதைத் தொடர்ந்து நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனினும் விக்ரம் லேண்டரின் நிலை குறித்து தொடர்ந்து மர்மம் நிலவி வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடுக்கும் முயற்சியில் நாசாவும் சேர்ந்தது. நாசாவின் நிலா மறுமதிப்பீட்டு சுற்றுப்பாதை விண்கலம் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது.

அது மட்டுமன்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை. நாசாவின் விண்கலம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடியாமல் போனதால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் நாசா தற்போது விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய புள்ளியும், சிதறிய விண்கலப் பகுதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பச்சை நிறப் புள்ளிகள் விண்கள குப்பைகளை குறிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நீலப் பகுதிகள் லேண்டர் மோதியதால் ஏற்பட்ட இடத்தைக் குறிக்கிறது. 

விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா ஏற்கனவே செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் படம் பிடித்தவற்றை ஆராய்ந்த சண்முக சுப்பிரமணியன், அதன் சிதைந்த பாகங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பி வைத்தார். இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின் படி விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தது.

click me!