டிக் டோக் நிறுவனம் அளித்த மேல்முறையீட்டு வழக்கில் அந்நிறுவனத்தின் செயலிக்கு தடைவிக்க மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிக் டோக் நிறுவனம் அளித்த மேல்முறையீட்டு வழக்கில் அந்நிறுவனத்தின் செயலிக்கு தடைவிக்க மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் டிக்-டோக் வீடியோக்கள் மூலம் பாலியல் தூண்டல்கள் நடைபெற்று வருவதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டிக் டாக் செயலியை இந்தியாவிலிருந்து தடை செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் ஏப்ரல் 3-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
15 நொடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை உருவாக்கும் டிக்டோக், வலைதளத்தில் லட்சக்கணக்கான டீன் ஏஜ் இளைஞர்கள் வலைபதிவிட்டு வருகின்றனர். "தற்போதைய நிலவரப்படி அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் இதுதான்" என்று ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் கூறியுள்ளது. இது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா ஆப்களை விடவும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆப்பில் நிறைய எடிட் செய்யப்படாத வரையறையற்ற வீடியோக்கள் அதிகம் இடம் பெற முடியும் என்பதால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களால் கூறப்படுகிறது. வரையறை அல்லாமல் 13 வயது குழந்தை கூட இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடிகிறது. பாலியல் ரீதியான வசனங்கள், பாடல் வரிகள், காட்சிகள் போன்ற தவறான வழிநடத்தலுக்கு இழுத்து செல்வதாக கூறப்படுகிறது.
அதேபோல தவறான கருத்துக்கள் பதியப்படுவதும், தனிமனித சுதந்திரம் பறிபோவதும் குற்றம் சாட்டப்படுகிறது. 1,70,000 பேர் இந்த ஆப்பிற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதில் 11-14 வயதுக்குட்பட்டோர் 30 சதவிகித்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த செயலிக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டோக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள் டிக்டோக் செயலிக்கு தடைவிதிக்க மறுத்து விட்டனர். மேலும் டிக் டோக் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 24ம் தேதி விசாரிக்க உள்ளனர்.