Tech Tips : மொபைல் சூடாகிறதா, இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லையா? இப்படி செய்து பாருங்கள்!

By Dinesh TG  |  First Published Sep 6, 2022, 12:28 PM IST

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் அடிக்கடி பாதிக்கப்படும் இணைய சேவை பாதிப்பு, செல்போன் சூடாவது என நாம் அவ்வபோது சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 


என்னதான் அதிக விலைக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் செல்போன் வாங்கினாலும், நமது பயன்பாட்டின் அடிப்பாடையில் அந்த செல்போனி்ன் பயன்பாட்டுத் திறன் நாளுக்கு நாள் குறைவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நமது செல்போனை என்றும் புதிதாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன.

இணையதள பிரச்சினை

Tap to resize

Latest Videos

undefined

நாம் தொடர்ச்சியாக இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென இணைய சேவை துண்டிக்கப்படலாம், அல்லது இணையதள வேகம் குறையலாம். அப்போது நாம் பொதுவாக செல்போனில் ஏரோபிளேன் மோடை  ஆன் செய்து, ஆப் செய்வதை வழக்கம். இதற்கு பதிலாக நமது செட்டிங் பகுதிக்கு சென்று சிம் கார்டை ஆப் செய்து பின்னர் ஆன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இணையதள வேகம் மேலும் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.

செல்போன் சூடாவது

செல்போனில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதன் மூலம் அடிக்கடி சூடாகலாம். உதாரணமாக இணையதளத்தை ஆன் செய்துவிட்டு கேம் விளையாடுவது, சேட் செய்து கொண்டே படம் பார்ப்பது உள்ளட்ட செயல்களை தவிர்ப்பதன் மூலம் செல்போன் சூடாவதைத் தடுக்கலாம். பப்ஜி கேம், பேஸ்புக் போன்ற அதிக அளவுள்ள ஆப்கள் பேக்ரவுண்டில் தொடர்ந்து இயங்குவதால் செல்போன் சூடாகும்.

பெர்பாமென்ஸ்

செல்போனில் எப்பொழுதும் பேட்டரி சேவிங் மோடை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் செல்போனின் பெர்பாமன்ஸ் மோசமாக வாய்ப்பு உள்ளது. 

அட இப்படி ஒரு ஐடியா இல்லாம போச்சே! இனி விளம்பரங்களே இல்லாமல் Youtube பார்க்கலாம்!!
 

ஹேங்கிங்

செல்போனில் உள்ள ஸ்டோரேஜை முழுவதுமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதன் மூலம் நமது செல்போன் அடிக்கடி ஹேங்காவதை பார்க்க முடியும். அதனால் செல் ஸ்டோரேஜை முடிந்தளவிற்கு குறைக்க வேண்டும். மேலும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஆப்களின் ஸ்டோரேஜ் குரோமை கேசி (cache) குடுப்பதன் மூலம் செல்போன்  வேகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய ‘நமக்கு நாமே’ திட்டம்.. சூப்பரா இருக்கே.!
 

டச் பிரச்சினை

செல்போனில் சரியாக டச் வேலை செய்யவில்லை என்று பலரும் சொல்வதுண்டு. பொதுவாக டச் சென்சார் எப்பொழுதும் ஒரு அளவில் இருக்கும் படியாகத் தான் செல்போன்கள் வடிவமைக்கப்படும். ஆனால் நாம் பயன்படுத்தும் விலை மலிவான டெம்பர் கிளாஸ் மூலம் டச் பிரச்சினை ஏற்படலாம். அதனால் டச் சரியாக வேலை செய்யவில்லை என்றால் முதலில் டெபர் கிளாசை சரிபார்ப்பது நல்லது.

click me!