வாட்ஸ்அப்பில் நாம் செய்த அரட்டைகளை ஆஃப்லைனில் எக்ஸ்போர்ட், இம்போர்ட், பேக்கப் இவை அனைத்தையும் கூகுள் டிரைவின் வாயிலாக செய்துகொள்ளலாம் என்று WEBetaInfo பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் தெரிவிக்கிறது.
பெரும்பாலான மக்களுக்கு விருப்பமான வாட்ஸ்அப்ப நிறுவனம் புது புது அப்டேட்டை செய்து வருகின்றது. அந்த வகையில் இந்த அம்சம் பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பெரும்பாலானோர் தங்கள் ஸ்மார்ட் போனை அடிக்கடி மாற்றுவர் அவர்களுக்கு தங்களின் வாட்ஸ்அப் சேட்க. ளை ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு மாற்றுவதற்காக, பேக் அப் செய்வது என்பது சிரமமான ஒன்றாக இருக்கும். இதை சரி செய்யும் வகையில் வாட்ஸஅப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை சோதித்து வருகிறது. இந்த அப்டேட்டின் மூலம் நாம் சுலபமாக இம்போர்ட், பேக்கப், எஸ்போர்ட் செய்துகொள்ளலாம்.
WhatsApp Update: நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாதா? வருகிறது புதிய அப்டேட்
பயனர்கள் தங்களுக்கு விருப்பமான அரட்டை அல்லது அனைத்து அரட்டை வரலாறு, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற மீடியா கோப்புகளை இம்போர்ட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் முதன்முதலில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சோதனை செய்வதாக இருந்தது, ஆனால், சில காரணங்களுக்காக தள்ளபி போனது.
அடுத்தடுத்து வெடிக்கும் ஸ்மார்ட்போன்.. 8 மாத குழந்தை பலி.. பேட்டரி வெடிப்புக்கு காரணம் என்ன?
இதன் சிறப்பு என்னவென்றால், இந்த அப்டேட் மூலம் நாம் ஆஃப்லைன் அதாவது இணைய வசதி இல்லாமலோ அல்லது குறைந்த இணைய வசதியை பயன்படுத்திக்கொண்டு நாம் ஈசியாக இம்போர்ட்,பேக்கப் செய்துகொள்ளலாம். இதனை இம்போர்ட் பேக்கப் என்ற ஆப்சன் வழியாக நாம் எஸ்போர்ட், இம்போர்ட்,பேக்கப் இவை அனைத்தையும் கூகுள் டிரைவின் வாயிலாக செய்துகொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, ஆண்ட்ராய்டு v2.22.13.11க்கான WhatsApp பீட்டா வெளியீட்டில் புதிய இம்போர்ட் ஆப்ஷனை WABetaInfo இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.