வந்துவிட்டது Vivo V25 5G ஸ்மார்ட்போன்! முன்பதிவு தொடக்கம்!!

Published : Sep 16, 2022, 02:11 PM IST
வந்துவிட்டது Vivo V25 5G ஸ்மார்ட்போன்! முன்பதிவு தொடக்கம்!!

சுருக்கம்

இந்தியாவில் விவோ வி25 ஸ்மார்ட்போன் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.  

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு உள்ளன. இதனிடையே செல்போன் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை சராமாரியாக அறிமுகம் செய்து வருகிறது. 

அந்தவகையில், விவோ நிறுவனம் விவோ வி25  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கூடுதலாக 5ஜி வசதி, 50 MP கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாகியுள்ளது. அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு வருகிறது.

விலை அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார்போலவே ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இஎ எம்ஓஎல்ஏடி டிஸ்பிலே வசதி உள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் பார்ப்பவர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கிறது. 1,080x2,404 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வடிவமைக்க விவோ நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் புது ஐபோன் வாங்க விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் சூப்பரான சிப்செட்டுடன் உள்ளது. கேம் விளையாடும் பயனாளர்களுக்கு ஏற்றாற்போல  மீடியாடெக் டைமென்சிட்டி 900 சிப்செட் வசதி உள்ளது.ஆகையால் கேமிங் பயனாளர்கள் கண்ணைமூடிக்கொண்டு இந்த ஸ்மார்ட்போனை  வாங்கலாம். இந்த விவோ வி 25 போனில் ஃபன்டச் ஓ எஸ் 12 சார்ந்த ஆண்டிராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

Flipkart வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு..! இப்படி செய்யவாங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!

விவோ வி25 5ஜி போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 50 mp கேமரா உள்ளதால் வீடியோ கால் மற்றும் செல்பிகளும், தெளிவாக வரும். எலெகான்ட் ப்ளாக் மற்றும் சர்ஃபிங் ப்ளூ வண்ணங்களில் இந்த போன்கள் வெளிவரவிருக்கின்றன. கேம் பூஸ்டர், லீகுய்ட் கூலிங் சிஸ்டம் மற்றும் 4 டி கேம் வைப்ரஷன் ஆப்சன்களும் இதில் உள்ளது. இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களைக் கொண்டுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!