Flipkart Big billion days சிறப்பு தள்ளுபடி விற்பனையில், ஷாவ்மி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில், பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது. செப்டெம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில், ஏற்கெனவே பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஸ்மார்ட் போன்களுக்கு எக்கச்சக்கமாக ஆபர்கள் குவிந்துள்ளது. இதில் ஐபோன் 13 ஆனது 50,000 ரூபாய்க்கு விற்கப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அட்டகாசமான ஆஃபர் வெளியாகி உள்ளது.
undefined
அதன்படி ஷாவ்மி 11, ரெட்மி நோட் 10T ஆகிய ஸ்மார்ட்போன்களும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் அமேசான் நிறுவனத்திலே அதிகமாக இடம்பெறும். ஆனால், தற்போது பிளிப்கார்ட் விற்பனையிலும் இடம் பெற்றுள்ளது.
ஷாவ்மி 11 வாங்கலாமா?
இந்தியாவில் ஷாவ்மி 11 அறிமுகமான போது இதன் விலையானது 26,999 யாக இருந்தது. இதன் கேமரா நன்றாக அமைந்திருந்தது அது போக அதன் விலைக்கு ஏற்ற அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது.
இதில் ஷாவ்மி 11 ஹைப்பர் சார்ஜ் மற்றும் ஷாவ்மி 11 இரண்டும் சேர்த்து 20,000 ரூபாய்க்கும் குறைவாக அறிமுகம் செய்யவுள்ளனர். ஷாவ்மி 11 ஸ்மார்ட்போனானது வங்கி சலுகைகள் இல்லாமல் 18,999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி 11 ஹைப்பர் சார்ஜை ரூ.19,999 முதல் பெற்றுக்கொள்ளலாம். இதில் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
வந்துவிட்டது Vivo V25 5G ஸ்மார்ட்போன்! முன்பதிவு தொடக்கம்!!
மலிவான விலையில் 5ஜி போன் வாங்கவேண்டுமா? இதோ ரெட்மி நோட் 10 T!
அழகான ரெட்மி நோட் 10 T 5Gயை நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெறும் 11,699 ரூபாய்க்கு இது 2400 x 1080 பிக்சல்கள்,6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 விகிதத்துடன் கேமர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
Flipkart வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு..! இப்படி செய்யவாங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!
ரெட்மி நோட் 11 SE ஆனது 11,249 ரூபாய்க்கு விற்கப்படும் என தகவல் வெளியானது. இது 120 ஹெர்ட்ஸ் ரெவ்ரேஷ் வீதத்துடன் AMOLED திரையைக் கொண்டுள்ளது. இந்த போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 700 பிராசசர் உள்ளது. இந்தியாவில் முதல் 5G நெட்வொர்க் வரவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.