Whatsapp-ல் போட்டோவுக்கு மட்டுமல்ல, இனி சாதாரண மெசேஜ்களுக்குமே இதை செய்யலாம்!

By Raghupati R  |  First Published Dec 10, 2022, 10:18 PM IST

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர் அதை ஒரு தடவை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும் அம்சம் விரைவில் வரவுள்ளது.


வாட்ஸ்அப்பில் பயனர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு போட்டோக்களை அனுப்பும் போது, எதிர்முனையில் உள்ளவர் அதை பார்த்த உடனே ஆட்டோமெட்டிக்காக டெலிட் ஆகும் வகையில், ‘One Time View’ என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது. இது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றளவும் பயனர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், போட்டோக்களைப் போலவே, சாதாரண டெக்ஸ்ட் மெசேஜ்க்கும் One Time View என்ற அம்சம் கொண்டு வருவதற்கு வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா விவரங்களை வெளியிடும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..மிகக்குறைந்த Samsung Galaxy M04 அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

இது வாட்ஸ்அப் பீட்டா 2.22.25.20 பதிப்பில் வந்துள்ளது. அதன்படி, மெசேஜ் டைப் செய்யும் போது, அதன் அருகிலேயே பச்சை நிறத்தில் ‘Send’ ஐகான் பூட்டு குறியீடுடடன் உள்ளது. அதைப் பார்க்கும் போது, Send ஐகானை லாங்க் பிரஸ் செய்தால், சில ஆப்ஷன்கள் தோன்றும். அதில், One Time View என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுவதாக தெரிகிறது. அதை கிளிக் செய்து மெசேஜ் அனுப்பினால், எதிர்முனையில் உள்ளவர் நீங்கள் அனுப்பிய மெசேஜை ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். 

ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியுமா?

பொதுவாக ஒருமுறை மட்டும் பார்க்கும் ஆப்ஷனை ஆன் செய்துவிட்டு அனுப்பப்படும் மெசேஜ்களை, ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. ஆனால், இதற்கு முன்பு வாட்ஸ்அப் வெப்பில் படங்கள் அப்படியே தெரியும், அப்போது சிலர் அதை டெஸ்க்டாப் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து வந்தனர். அதன்பிறகு, பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் வகையில், அப்படியான ஒன் டைம் படங்களை, டெஸ்க்டாப்பில் பார்க்கமுடியாதவாறு அப்டேட் செய்யப்பட்டது. 

எனவே, இப்போது வரவிருக்கும் ஒன் டைம் வியூ மெசேஜ் ஆப்ஷனும், ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாதபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் பீட்டா பதிப்பில் இந்த அப்டேட் கொண்டு வரப்படும். அதன்பிறகு, அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வரும். வாட்ஸ்அப் அப்டேட் ஆகாமல் இருந்தால், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று அப்டேட் செய்து, லேட்டஸ்ட் ஆப்ஷன்களைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க..1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்க எலான் மஸ்க் திட்டம்! லிஸ்டில் உங்கள் கணக்கு உள்ளதா?

click me!