அமேசான் தளத்தில் ‘ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல்’ என்ற பெயரில் ஷாவ்மி, ரியல்மி, ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி அமேசானில் தொடர்ந்து பல நாட்களாக சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்றது. சில பயனர்கள் அந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து, வாங்க முடியாமல் போயிருக்கலாம். அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
அமேசான் தற்போது ‘ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல்’ என்ற விற்பனையை அறிவித்துள்ளது. இதில் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு சலுகைகள் உள்ளன. Xiaomi, iQOO, realme, Tecno, Oppo மற்றும் Lava உள்ளிட்ட பிராண்டுகள் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக Redmi A1, iQOO Z6 Lite, Redmi 11 Prime 5G, Tecno Spark 9, Oppo F21s Pro 5G, Redmi Note 11 மற்றும் Realme Narzo 50i ஆகிய போன்களுக்கு நல்ல ஆஃபர் உள்ளது. மேலும், வங்கி கார்டுகள் மற்றும் விலையில்லா EMI சலுகைகள் மூலம், அதிகபட்ச ஆஃபர்களை பெற முடியும். இந்த சலுகை டிசம்பர் 14, 2022 வரை இருக்கும்.
Amazon Upgrade விற்பனையில், Redmi A1ஐ ரூ.5,579க்கு பெறலாம்; ரெட்மி 10ஏ ரூ.7,469, ரெட்மி 11 பிரைம் 5ஜி ரூ.11,999 மற்றும் ரெட்மி நோட் 11 ரூ.10,999 என்று விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. வங்கி கார்டுகளுக்கான சலுகைகளும் இதில் உள்ளது, எனவே உங்களிடம் தகுதியான வங்கி அட்டைகள் இருந்தால் ஆஃபரில் பெற்றுக் கொள்ளலாம்.
மிகக்குறைந்த Samsung Galaxy M04 அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
iQOO Neo 6 ஆனது ரூ. 26,999 முதல் கிடைக்கும், மேலும் 3, 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI சலுகையும் இதில் அடங்கும். iQOO Z6 Pro மற்றும் iQOO Z6 Lite முறையே ரூ.19,999 மற்றும் ரூ.12,499க்கு கிடைக்கும். டெக்னோ பாப் 6 ப்ரோ ரூ.5,579க்கும், டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் ரூ.7,649க்கும் கிடைக்கும். Tecno POVA 5G மற்றும் Tecno Camon 19 Mondrian ஆகியவை முறையே ரூ.14299 மற்றும் ரூ.16999க்கு கிடைக்கும்.
சில Realme போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அவற்றில் குறிப்பாக Realme Narzo 50i ரூ.5,499க்கும், Realme Narzo 50A Prime முறையே ரூ.8,999க்கும் கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் 5000 mAh மெகா பேட்டரி, சக்திவாய்ந்த பிராசசர் இன்னும் பல அம்சங்கள் உள்ளன.