WhatsApp Update: இனி WhatsApp Desktop ஸ்கிரீன் லாக் செய்யலாம்!

By Dinesh TG  |  First Published Nov 22, 2022, 10:00 PM IST

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிலும் ஸ்கிரீன் லாக் செய்யும் அம்சம் கொண்டு வரப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே காணலாம்.


வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது  இது டெஸ்க்டாப் பயனர்களுக்கு மல்டிமீடியா ஃபைல்களை அனுப்பும் போது, அதனுடைய தலைப்பையும் சேர்த்து அனுப்ப உதவுகிறது. இந்த நிலையில், வாட்ஸ் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு மற்றொரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் WhatsApp டெஸ்க்டாப்பை ஸ்கிரீன் லாக் செய்யும் வகையில் உள்ளது.

பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, வாட்ஸ்அப்பின் இந்த முயற்சி ஒரு சிறந்த நடவடிக்கையாகும். பயனர்கள் தங்கள் WhatsApp டெஸ்க்டாப்களை மற்றவர்கள் பார்க்காத வகையில்  பாதுகாக்கிறது. குறிப்பாக பொது இடங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் கம்ப்யூட்டர் இருக்கும் போது இந்த அம்சம் உதவிகரமாக இருக்கும். 

Tap to resize

Latest Videos

தற்போதைய நிலவரப்படி, இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் இது வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp மூலமாக இனி ஷாப்பிங்கும் செய்யலாம்!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் ஸ்கிரீன் லாக் வசதியை பயன்படுத்துவது எப்படி?

பயனர்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் ஸ்கிரீன் லாக் அம்சத்தை செட்டிங் மெனுவில் இருந்து இயக்கலாம். இது ஒரு ஆப்ஷனாக இருக்கும். மேலும், தானாக ஸ்கிரீன் லாக் செய்யப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த அம்சம் விண்டோஸ் மற்றும் மேக் என இரண்டு பயனர்களுக்கும் கிடைக்கும்.
ஒவ்வொரு முறையும் பயனர் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைத் திறக்கும்போது, பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும். மேலும், பாஸ்வேர்டை சேமித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக தெரிகிறது. கடவுச்சொல்லை மறந்துவிட்டால், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் இருந்து வெளியேறி, உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்து மீண்டும் வாட்ஸ்அப்பில் உள்நுழைய வேண்டும்.

வாட்ஸ்அப் ஸ்கிரீன் லாக் - பலன்கள்:

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சாப்ட்வேரில் உள்ள ஸஅகிரீன் லாக் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைக்க முடியும். பயனர்களைத் தவிர மற்றவர்கள் வாட்ஸ்அப்பை திறக்க முடியாது. இதனால், தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் நோட்டமிடவும் முடியாது.
 

click me!