டுவிட்டரின் ப்ளூ சந்தா மீண்டும் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் விலை விவரங்கள் வெளியானது. இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குக் காணலாம்.
பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்விட்டர் ப்ளூ சந்தா இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் மீண்டும் கிடைக்கிறது. டுவிட்டர் நிறுவனம் ப்ளூ சந்தாவின விலையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஆப்பிள் ஆப் ஸ்டோரானது, ஐபோன் பயனர்களுக்கு சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளூ சந்தாவை வாங்கும் பயனர்கள், டுவிட்டரின் ப்ளூ டிக் குறியீடும், இன்னும் சில சலுகைகளையும் பெறுவார்கள்.
ட்விட்டர் ப்ளூ சந்தாவிற்கு ஐபோன் பயனர்கள் மாதம் ரூ.999 செலுத்த வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. டுவிட்டர் நிறுவனம் முதலில் இந்த அம்சத்தை Web மற்றும் iOS தளத்தில் சோதிக்கிறது. எனவே, இது கூட ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான விலை விவரங்கள் வராததற்குக் காரணமாக இருக்கலாம்.
undefined
iOS பயனர்களுக்கான விலை முன்பு RS 719 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆப் ஸ்டோர் தரப்பில் பரிவர்த்தனைகள் மற்றும் வழக்கமான சந்தாக்களுக்கு ஆப்பிள் டெவலப்பர்களுக்கு 30 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் விதித்தது. இதனால் அந்த பணத்தை ஈடுகட்டும் வகையில் அதிக விலையுடன் ப்ளூ டிக் சந்தா மீண்டும் வந்துள்ளது.
Twitter Blue Subscription இன்று மீண்டும் அமல்: விலை, சலுகைகள், முழுவிவரங்கள் இதோ!
அமெரிக்காவில், ஆண்ட்ராய்டில் ட்விட்டர் பயனர்கள் $8 செலுத்த வேண்டும், iOS பயனர்கள் $11 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் டுவிட்டர் ப்ளு சந்தா சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டுவிட்டரில் ஏற்கெனவே ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள், தங்கள் ப்ளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் ப்ளூ டிக் திரும்பப் பெறப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் ப்ளூ சந்தாவானது, வெறும் ப்ளூ டிக்கை மட்டும் அல்லாமல் இன்னும் சில சலுகைகளையும் வழங்குகிறது. சாதாரண பயனர்களுக்கும் ப்ளூ டிக் வழங்கப்படுவதால் மற்ற நிறுவனங்கள், பிரபலங்களை தனித்துவமாக்கி காட்டுவதற்கு டுவிட்டர் நிறுவனம் சில புதிய கலர் குறியீடும் கொண்டு வருகிறது. அதன்படி, வணிகம், தொழில்துறை நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளுக்கு தங்கநிறத்திலான டிக், அரசு அதிகாரிகளுக்கு சாம்பல் நிறத்திலான டிக் மார்க் வழங்கப்படுகிறது.