பிஎஸ்என்எல் பிராட்பேண்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட 775 ரூபாய் திட்டம் விரைவில் நீக்கப்பட உள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 150 Mbps வேகத்தில் 2000ஜிபி டேட்டா, சில OTT சந்தாக்கள் இந்த திட்டத்தில் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் 14, 2022 முதல் ரூ.775 பிராட்பேண்ட் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாகவும், பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ கட்டண பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.
ரூ.775 பிளான் மட்டுமில்லாமல், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களையும் பிஎஸ்என்எல் ரத்து செய்ய உள்ளது. இரண்டு திட்டங்களும் ரூ.275 விலையில் உள்ளன, ஆனால் வெவ்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.775 மற்றும் ரூ.275 பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.775 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.775 திட்டத்தின் கீழ், BSNL 150 Mbps இணைய வேகம் மற்றும் 2000GB (2TB) இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும்.. 2000ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, இணைய வேகம் 10 எம்பிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
கூடுதலாக, இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட், ஷெமரூ, ஹங்காமா, சோனிலிவ், ZEE5, வூட் மற்றும் யூப் டிவி ஆகியவையும் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.275 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.275 திட்டத்தில் 75 நாட்களுக்கு அன்லிமிடேட் கால், 3300GB (3.3TB) டேட்டா வழங்குகிறது. ரூ.275 என்ற இரண்டு பிளான் இடையே உள்ள வித்தியாசம் வெவ்வேறு டேட்டா வேகம் மட்டுமே. ஒரு பிளானில் 30 Mbps வேகத்தை வழங்குகிறது, மற்றொன்று, 60 Mbps வேகத்தை வழங்குகிறது. டேட்டா காலியானதும் இரண்டு பிளான்களிலும் டேட்டாவின் வேகம் 4 Mbps ஆகக் குறைக்கப்படும்.
பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ரூ.775 மற்றும் ரூ.275 ஆகிய இரண்டு திட்டங்களும் மலிவானவை. மற்ற அனைத்து பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்களும் 1 மாத வேலிடிட்டியுடன் அதிவேக இணைய வேகத்தை வழங்குகின்றன.
எனவே, நீங்கள் உங்கள் BSNL திட்டத்தை ரீசார்ஜ் செய்யப் போகிறீர்கள் என்றால், ரூ. 775 அல்லது ரூ. 275க்கு மாறி, அந்த பிளான் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் BSNL ஃபைபர் இணைப்பைப் பெற விரும்பினால், அருகிலுள்ள BSNL அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புதிய ஃபைபர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் புதிய இணைப்பை 2-4 நாட்களுக்குள் வழங்கப்படும். BSNL இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று புதிய இணைப்பு பெறுவதற்கு புக் செய்யலாம்.