இதை செய்தால் போதும்! போனில் சார்ஜ் ரொம்ப நேரம் நிற்கும்!!

By Dinesh TG  |  First Published Dec 12, 2022, 2:05 PM IST

ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? அப்படி என்றால் இது உங்களுக்கான பகுதி தான். ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட சிலவற்றை மாற்றியமைத்தாலே சார்ஜ் நீடித்து உழைக்கும். அது என்ன என்பதை இங்குக் காணலாம்.


எவ்வளவு பெரிய ஸ்மார்ட்போன் வாங்கினாலும் சரி. நாளடைவில் அதன் பேட்டரி மந்த நிலையை அடைந்து விடும். ஆரம்பத்தில் நீடித்து உழைத்த பேட்டரி சார்ஜ், போக போக அதன் திறனை இழந்துவிடுவதாக பலரும் சொல்வதை கேட்டிருப்போம். 

அவ்வாறு ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி விரைவில் சார்ஜ் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் பயனர்கள் தெரியாமல் கையாள்வதும் ஒரு காரணமாக அமைகின்றன. எனவே, ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் தரம் என்பது அந்த கம்பெனியின் உத்தரவாதமாக இருந்தாலும், அதை முறையாக பயன்படுத்துவதும், மேம்படுத்துவதும் அவசியமாகும். 

Tap to resize

Latest Videos

பேட்டரியைச் சேமித்தல்:

முடிந்தவரை திரையின் வெளிச்ச அளவை குறைக்கவும். உங்கள் மொபைலில் ஆட்டோமெட்டிக்காக பிரைட்னஸ் சரிசெய்யும் அம்சம் இருந்தால், அது அது தானாகவே திரையின் வெளிச்சத்தை சுற்றுப்புறத்திற்கு ஏற்ப சரிசெய்யும். நீங்கள் பிரைட்னஸை தனியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. 
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனில் ஆட்டோமெட்டிக்காக பிரைட்னஸை குறைக்கும் ஆப்ஷன் இல்லை எனில், முடிந்த வரையில் உங்கள் பிரைட்னஸை பாதியாகக் குறைக்க முயற்சி செய்யலாம். பிரைட்னஸ் குறைவாக வைத்தால் பேட்டரி நீடித்து உழைக்கும்.

பேட்டரியைச் சேமிக்க பவர்-சேவர் முறையைப் பயன்படுத்தவும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில், பேட்டரி அளவு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு (உதாரணமாக 20%) குறையும் போது தானாகவே மாறிக்கொள்ளும் வகையிலான பவர்-சேவர் பயன்முறை உள்ளது. உங்களிடம் பேட்டரி சார்ஜ் அளவு குறைவாக இருந்தால், உடனே இந்த பவர் சேவர் முறையை ஆன் செய்யலாம். 

மிகக்குறைந்த Samsung Galaxy M04 அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

பவர் சேவர் ஆன் செய்யும் முறை:

ஆண்ட்ராய்டு: அமைப்புகள் > பேட்டரி > பவர் பயன்முறை.
iOS: அமைப்புகள் > பேட்டரி > குறைந்த ஆற்றல் பயன்முறை.

பேட்டரியை அதிகம் பயன்படுத்தும் செயலிகளை அன்இன்ஸ்ட்டால் செய்யவும். சில ஃபோன் செயலிகள் இயங்குவதற்கு அதிக அளவு சார்ஜ் எடுத்துக் கொள்ளும். பிற பயன்பாடுகளை விட நீண்ட ஓடிக்கொண்டிருக்கும். இந்த செயலிகள் தேவையில்லாமல் இருந்தால் அவற்றை அன்இன்ஸ்ட்டால் செய்து பேட்டரி ஆயுளை மேம்படுத்தலாம். 

உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்ட்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து செயலிகளையும், அவை எடுத்துக்கொள்ளும் பேட்டரி சக்தியின் அடிப்படையில் வரிசைப்படுத்தி தேவையில்லாததை அன்இன்ஸ்ட்டால் செய்யலாம். அவ்வாறு வரிசைப்படுத்தி பார்க்க பின்வரும் வழிமுறையில் செல்லவும்:

Android: அமைப்புகள் > பேட்டரி > பேட்டரி பயன்பாடு

iOS: அமைப்புகள் > பேட்டரி (பட்டியலைக் கண்டுபிடிக்க திரையில் கீழே உருட்டவும்)

முடிந்தால் 5ஜியை ஆஃப் செய்யவும். இதைச் செய்வது பேட்டரியை இன்னும் மேம்படுத்தும்.
 

click me!