இதன் காரணமாக இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் அதிக மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல்வேறு முன்னணி கார் உற்பத்தியாளர்களும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களை பிரிவில் கவனம் செலுத்த துவங்கி விட்டன. இதன் காரணமாக இந்த பிரிவில் அதிக மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், வெளியாகும் அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்களை கவர்வதில்லை. அந்த வகையில், இந்திய சந்தையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
5 - டாடா நெக்சான்:
undefined
நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் விற்பனையாகும் டாப் 3 கார்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் முதல் எஸ்.யு.வி. என்ற பெருமையை டாடா நெக்சான் பெற்று இருக்கிறது.
4 - மஹிந்திரா XUV300:
மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் இந்திய காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் புதுவரவு மாடல் எனலாம். இந்த கார் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, போர்டு இகோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
3 - கியா சொனெட்:
கனெக்டெட் தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கார் இது. இந்த பிரிவில் 10.25 இன்ச் HD தொடுதிரை ஸ்கிரீன், நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் UVO கனெக்டெட் தொழில்நுட்படங்கள் கொண்ட முதல் மாடல் இது ஆகும். கியா சொனெட் மாடலில் ஸ்டீரிங் வீல் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், வெவ்வேறு டிரைவ் மற்றும் டிராக்ஷன் மோட்கள் உள்ளன.
2 - ஹூண்டாய் வென்யூ:
இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1 லிட்டர் டர்போ, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சத்து 01 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பப்பட்டு உள்ளது.
1 - ரெனால்ட் கைகர்:
ரெனால்ட் கைகர் மாடலில் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 100 பி.எஸ். பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.