ரூ. 3.2 கோடி விலையில் புது கார்... மாஸ் காட்டிய கங்கனா ரனாவத்

By Kevin Kaarki  |  First Published May 21, 2022, 1:44 PM IST

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் மாடல் - S 580 மற்றும் S 680 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 


இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் S கிளாஸ் மாடல் விற்பனை சமீபத்தில் தான் துவங்கியது. அறிமுகமானதும் புதிய பென்ஸ் S கிளாஸ் மாடல் பல்வேறு நட்சத்திர பிரபலங்களுக்கு பிடித்தமான மாடலாக மாறி விட்டது. புதிய மேபேக் S கிளாஸ் மாடலை நடிகையும், தயாரிப்பாளருமான கங்கனா ரனாவத் வாங்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது மேபேக் S கிளாஸ் மாடலை டெலிவரி எடுத்து இருக்கிறார். 

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் மாடல் - S 580 மற்றும் S 680 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நடிகை கங்கனா ரனாவத் டாப் எண்ட் S 680 4மேடிக் மாடலையே தேர்வு செய்து வாங்கி இருக்கிறார். இந்த மாடல் விலை ரூ. 3 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது இந்தியாவுக்கு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட் ஆக இறக்குமதி செய்யப்படுகிறது. 

Latest Videos

undefined

அசத்தல் அம்சங்கள்:

புதிய மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் 180mm நீண்ட வீல்பேஸ் உடன் 5.5mm அளவு நீளமாக உள்ளது. கவர்ந்து இழுக்கும் தோற்றம் கொண்டு இருக்கும் மேபேக் S கிளாஸ் மாடலின் கதவுகள் எலெக்ட்ரிக் முறையில் இயங்கும். இதன் காரணமாக கதவை மூட நாம் எதுவும் செய்ய வேண்டாம். மேலும் இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பக்கெட் சீட்கள் உள்ளன. இவற்றை 19 இல் இருந்து 44 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். இத்துடன் பயணிகள் கால் வைத்துக் கொள்ள விரும்பும் போது மட்டும் நீட்டித்துக் கொள்ளக் கூடிய லெக் ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ஜின் விவரங்கள்:

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் S 680 4மேடிக் மாடலில் 6 லிட்டர், V12 மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 604 பி.ஹெச்.பி. பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் AWD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

லெவல் 2 ஆட்டோனோஸ் டிரைவிங் மற்றும் எவாசிவ் ஸ்டீரிங் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் மற்றும் கிரால் டிராஃபிக் ஃபன்ஷன் போன்ற அம்சங்கள் கொண்ட இந்தியாவின் முதல் கார் என்ற பெருமையை புதிய S கிளாஸ் மேபேக் மாடல் பெற்று இருக்கிறது. மேலும் இந்த காரில் மொத்தம் 13 ஏர்பேக் உள்ளன. இத்துடன் ஏர்மேடிக் ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. 

click me!