பிடிரான் டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல் பிடிரான் நிறுவனத்தின் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளரான பிடிரான் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் மாடல் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. குறைந்த விலையில் கிடைப்பதோடு, நம்பகத்தன்மை கொண்ட சாதனங்கள் என பிடிரான் மாடல்கள் சந்தையில் பெயர் பெற்றுள்ளன.
புதிய பிடிரான் டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலை முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. தலைசிறந்த ஹார்டுவேர் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் கொண்டிருக்கும் பிடிரான் டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல் பிடிரான் நிறுவனத்தின் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மேம்பட்ட சவுண்ட் அனுபவம் மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
அம்சங்கள்:
பிடிரான் டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலை முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது இந்த நெக்பேண்ட் இயர்போன் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் ட்ரூ சோனிக் பேஸ் பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கரப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிவேக கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலில் 400mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
நிறங்கள்:
இந்த வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல் உயர் ரக ABS பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் மெட்டாலிக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடை 37 கிராம் மட்டுமே. மேலும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது வியர்வை மற்றும் தண்ணீரில் நனைந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. இதில் அழைப்புகள், மியூசிக், வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பிடிரான் டேன்ஜண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல்- ஃபேவ் பிளாக், ஓசன் கிரீன் மற்றும் மேஜிக் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்திய சந்தையில் புதிய பிடிரான் நெக்பேண்ட் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.