புதிய ஸ்கார்பியோ N இந்திய வெளியீடு - மஹிந்திரா சொன்ன சூப்பர் தகவல்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 21, 2022, 02:31 PM IST
புதிய ஸ்கார்பியோ N இந்திய வெளியீடு - மஹிந்திரா சொன்ன சூப்பர் தகவல்..!

சுருக்கம்

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ N எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய ஸ்கார்பியோ மாடல் Z101 குறியீட்டு பெயரில், பாடி-ஆன்-ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N இந்திய சந்தையில் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இந்த மாடல் பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மேலும் ஸ்கார்பியோ N அறிமுகமானாலும், தற்போதைய மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். எனினும், இந்த மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும். 

ஸ்கார்பியோ N டிசைன்:

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் சென்னை அருகில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலி, மஹிந்திரா வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில் உள்ள மஹிந்திரா டிசைன் ஸ்டூடியோவில் உள்ள டிசைனர் குழுக்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களின் படி காரின் முன்புறம் செங்குத்தான க்ரோம் ஸ்லாட்கள் அடங்கிய கிரில், டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டிகேட்டர்கள் உள்ளன. 

இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பபரில் ஹனிகொம்ப் மெஷ் பேட்டன், சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. பக்கவாட்டில் XUV700 மாடலில் உள்ளதை போன்ற பீஃப்டு-அப் பெல்ட் லைன் உள்ளது. இந்த காரில் டூயல் டோன் ட்வின் ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் கிளாடிங்கில் சில்வர் ஹைலைட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டோர் ஹேண்டில், பாடி கலர் ORVMகள், இண்டிகேட்டர்களில் க்ரோம் இன்சர்ட்கள் உள்ளன.

இண்டீரியர்:

இந்த காரின் பின்புறம் வால்வோ மாடல்களில் உள்ளதை போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் எப்படி காட்சி அளிக்கும் என்பது பற்றி தற்போதைய புகைப்படங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், ஏற்கனவே வெளியாகி இருந்த தகவல்களின் படி இந்த மாடலில் சன்ரூஃப், மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் லெதர் இருக்கை கவர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். மேலும் டாப் எண்ட் மாடல்களில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

நம்பமுடியாத விலையில் ஆண்டு இறுதி ஆஃபர்! Pixel வாங்க இதுதான் சரியான நேரம்!
12.1 இன்ச் திரை, 10,200mAh பேட்டரி… எல்லாம் ஒரே டேப்லெட்டில்! Lenovo Idea Tab Plus விலை?