Ducati panigale v2 : விலை ரூ. 21.3 லட்சம் மட்டுமே! புதிய ஸ்பெஷல் எடிஷன் டுகாட்டி பைக் அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 16, 2022, 6:19 PM IST

டுகாட்டி நிருவனம் இந்திய சந்தையில் ஸ்பெஷல் எடிஷன் பேனிகல் வி2 பேலிஸ் எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. 


டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிஷன் பேனிகேல் வி12 பேலிஸ் 1st சாம்பியன்ஷிப் 20th ஆனிவர்சரி மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் டுகாட்டி பைக் விலை ரூ. 21 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டு வீரரான டிராய் பேலிஸ் சாதனைகளை பரைசாற்றும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பைக் பேலிஸ் பயன்படுத்தி வந்த டுகாட்டி 996 R ரேசிங் பைக் போன்று காட்சியளிக்கும் பிரத்யேக லிவெரி கொண்டிருக்கிறது. டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 996 R மாடல் வென்ற முதல் விருது இது ஆகும். பெயருக்கு ஏற்றார் போல் பேனிகேல் வி12 மாடலில் பேலிஸ் 1st சாம்பியன்ஷிப் 20th ஆனிவர்சரியை பரைசாற்றுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் மெயின் நிறம் ரெட் ஆகும். இத்துடன் கிரீன் நிறம் இணைந்து இத்தாலி நாட்டு தேசிய கொடியை பிரதிபலிக்கிறது. 

Tap to resize

Latest Videos

இந்த பைக் லிவெரியில் டிராய் பேலிஸ் ரேஸ் நம்பரான #21, ஷெல் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மீது டிராய் கையெழுத்து இடம்பெற்று இருக்கிறது. இதன் பிலெட் அலுமினியம் ட்ரிபில் கிளாம்ப் மீது பைக்கரின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. விஷூவல் மாற்றங்கள் மட்டுமின்றி புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஒலின்ஸ் உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டுகாட்டி ஸ்பெஷல் எடிஷன் மாடலின் முன்புறம் NX30 முன்புற ஃபோர்க், பின்புறம் TTX36 ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் டேம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. உயர் ரக அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த பைக் எடை ஸ்டாண்டர்டு எடிஷனை விட 3 கிலோ வரை குறைந்து இருக்கிறது. எடை குறைந்து இருப்பதால், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்த முடிந்தது. 

இத்துடன் ஸ்போர்ட் க்ரிப்கள், கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம்  கொண்டு உருவாக்கப்பட்ட சைலன்சர் அவுட்லெட் கவர், ரைடர் சீட் இருவேறு உபகரணங்களால் உருவாக்கப்பட்டு டபுள் ரெட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் செல்ஃப் கிளீனிங் பிரேக், கிளட்ச் பம்ப்கள், ஸ்மோக் கிரே ஆயில் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 955சிசி சூப்பர்குவாட்ரோ டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் டுகாட்டி மாடலில் இந்த என்ஜின் 155 ஹெச்.பி. திறன், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

click me!