KTM 790 Duke: ஷார்ட் பிரேக்- மீண்டும் அறிமுகமான கே.டி.எம். 790 டியூக்!

By Kevin Kaarki  |  First Published Mar 16, 2022, 5:00 PM IST

கே.டி.எம். நிறுவனம் தனது 790 டியூக் மோட்டார்சைக்கிள் மாடலை மீண்டும் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


கே.டி.எம். நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது டியூக் 790 ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் 2019 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2021 ஆண்டு வாக்கில் கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக 890 டியூக் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் அறிமுகமான கே.டி.எம். 890 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை. இந்த ஆண்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் 390 டியூக் மற்றும் 890 டியூக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 2022 கே.டி.எம். 790 டியூக் மாடல் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இதன் ஒட்டுமொத்த டிசைன் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் கூர்மையாக காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் யூரோ 5 அல்லது பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 799சிசி பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. திறன், 87 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

எலெக்ட்ரிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2022 கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் மாடலில் லீன்-சென்சிடிவ் டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ABS, ரெயின், ஸ்டிரீட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித ரைட் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் குயிக் ஷிஃப்டர், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக் மோட், TPMS மற்றும் கே.டி.எம். மை ரைட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

புதிய கே.டி.எம். 790 டியூக் மாடல் விலை 9 ஆயிரம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய கே.டி.எம். 890 டியூக் மாடலை விடை குறைவு ஆகும். சர்வதேச சந்தையில் கே.டி.எம். டியூக் 890 விலை 12 ஆயிரம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 10.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

790 டியூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது பற்றி கே.டி.எம். இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஒருவேளை இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் கே.டி.எம். 790 டியூக் மாடல் டிரையம்ப் டிரைடெண்ட் 660 மற்றும் ஹோண்டா CB650R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் டிரையம்ப் டிரைடெண்ட் 660 விலை ரூ. 7.58 லட்சம் என்றும் ஹோண்டா CB650R விலை ரூ. 8.67 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

click me!