அமேசான் இந்தியா நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிக சலுகை வழங்கும் மொபைல் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது.
அமேசான் இந்தியா நிறுவனம் மொபைல் சேவிங்ஸ் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. ஜாப்ரா நிறுவனத்துடன் இணைந்து அமேசான் நடத்தும் சிறப்பு விற்பனை மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் மொபைல் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஐகூ மற்றும் பல்வேறு இதர நிறுவன மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி, ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி, ஒன்பிளஸ் 9RT, சாம்சங் கேலக்ஸி M32 5ஜி, Mi 11X, சியோமி 11 லைட் NDE 5ஜி, ரெட்மி நோட் 11T 5ஜி, ரெட்மி நோட் 10S, ரெட்மி நோட் 10T 5ஜி, ஐகூ 9 ப்ரோ 5ஜி மற்றும் ஐகூ 9 SE உள்ளிட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு, மாத தவணை முறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். இத்துடன் சிறப்பான எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி னஉள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவணைகள் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
- பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சலுகைகள், ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரிபிலேஸ்மெண்ட் மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
- வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அக்சஸரீக்களை குறைந்த பட்சம் ரூ. 69 துவக்க விலையில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும்.
- சிறப்பு விற்பனையில் பவர் பேங்க் மாடல்களுக்கு அதிகபட்சம் 60 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐகூ ஸ்மார்ட்போன்கள்
- ஐகூ 9 ப்ரோ 5ஜி விலை ரூ. 64,990. ரூ. 4 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி
- ஐகூ 9 SE விலை ரூ. 33,990. ரூ. 3 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி
- ஐகூ Z5 விலை ரூ. 20,990, ஐகூ Z3 விலை ரூ. 16,990 மற்றும் வங்கி சலுகைகள்
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்
- ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மற்றும் நார்டு 2 5ஜி மாடல்களின் விலை முறையே ரூ. 28,499 மற்றும் ரூ. 21,499 என துவங்குகின்றன. இரு மாடல்களுக்கும் வங்கி சலுகைகள், மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி.
- ஒன்பிளஸ் 9RT மாடல் விலை ரூ. 42,999, ஒன்பிளஸ் 9R விலை ரூ. 36,99, ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை ரூ. 49,999, ஒன்பிளஸ் 9 விலை ரூ. 36,999 ஆகும். அனைத்து மாடல்களுக்கும் உடனடி வங்கி தள்ளுபடிகள், எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சியோமி ஸ்மார்ட்போன்கள்
- Mi 11X ப்ரோ விலை ரூ. 31,999, Mi 11X விலை ரூ. 22,999, சியோமி 11 லைட் NE 5ஜி விலை ரூ. 21,499 ஆகும். இத்துடன் வங்கி சலுகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.
- ரெட்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் விலை ரூ. 19,999, ரெட்மி நோட் 11S விலை ரூ. 15,499, ரெட்மி நோட் 10 ப்ரோ விலை ரூ. 17,999 ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் கேலக்ஸி M12 விலை ரூ. 9499. சாம்சங் கேலக்ஸி M32 5ஜி விலை ரூ. 15,499, சாம்சங் கேலக்ஸி M52 5ஜி விலை ரூ. 53,499 ஆகும். இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ரியல்மி ஸ்மார்ட்போன்கள்
ரியல்மி நார்சோ 50A விலை ரூ. 9749, ரியல்மி நார்சோ 30 5ஜி விலை ரூ. 13,499, ரியல்மி நார்சோ 50 விலை ரூ. 11,699 ஆகும். இத்துடன் வங்கி சலுகைகளில் ரூ. 1500 வரை கேஷ்பேக் மற்றும் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது.