8GB ரேம், லிக்விட் கூலிங் வசதியுடன் ஐகூ Z6 5ஜி அறிமுகம் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By Kevin Kaarki  |  First Published Mar 16, 2022, 1:31 PM IST

ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய Z6 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ Z6 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Z5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐகூ Z6 5ஜி மாடலில் 6.58 இனஅச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோலில் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB எக்ஸ்டெண்டட் ரேம், 5 லேயர் லிக்விட் கூலிங் சிஸ்டம், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் ஐகூ Z6 5ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஐகூ Z6 5ஜி அம்சங்கள்

- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- அட்ரினோ 619L GPU
- 4GB / 6GB / 8GB LPDDR4x  ரேம்
- 128GB (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 12
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/1.8
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய ஐகூ Z6 5ஜி ஸ்மார்ட்போன் டைனமோ பிளாக் மற்றும் குரோமேடிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,499 என்றும், 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 22 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.

அறிமுக சலுகை விவரங்கள்

- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி
- ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி
- ரூ. 1500 வரை கூடுதல் எக்சேன்ஜ் போனஸ்
- பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரி-பிலேஸ்மெண்ட் வசதி

click me!