இரண்டாகப் பிாியும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் !
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 2 நிறுவனங்களாகப் பிரிய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மின்னணு பொருட்களின் தயாரிப்பு ஜாம்பவான் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அலுவலகங்கள் தென்கொரியாவை மையமாகக் காெண்டு செயல்டுபடுகிறது. இந்நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்திற்கே சவால் விடும் வகையில், பல ரகப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து, விநியோகித்து வந்தது.
ஆனால், சமீபத்தில் வெளியிட்ட நோட் 7 ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்ததாக பரவலாக புகார்கள் வந்தன. நோட் 7 பிரச்னையால் சாம்சங் போன்களின் விற்பனையும் உலக அளவில் வீழ்ச்சியடைந்தன. இதனால், தனது அடுத்த ஸ்மார்ட் போனை மிகவும் பாதுகாப்பானதாக வெளியிட சாம்சங் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அத்துடன், நிறுவனத்தின் பங்குதாரர்கள் இடையே கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் என்பதை, 2 நிறுவனங்களாகப் பிரிக்க, அதன் பங்குதாரர்கள் முடிவு செய்துள்ளனர். இத்தகவலை சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இதுபற்றி கூடுதல் விவரம் தெரிவிக்க மறுத்துவிட்ட அந்நிறுவனம், விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கேலக்ஸி நோட் 7 பிரச்னை காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் முதலாக, ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்புப் பணிகளை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.