சவால் விடும் ஜியோ.......!!! 50 கோடி வாடிக்கையாளர்கள்......!!! மாபெரும் சாதனை....!!!
இந்தியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜியோ.......!
இலவச அழைப்பு வசதி, இலவச டேட்டா சேவை, ரோமிங் சலுகை எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதால், நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் சிம் கார்டு மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க, மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த sep 5 ஆம் தேதி, ஜியோ குறித்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை , ஜியோவிற்கு மட்டும் சுமார் 5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதன்படி, 4ஜி சேவையை தொடங்கியது முதல், இதுவரை ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வாங்கியவர்களின் எண்ணிக்கை 50 கோடியாக உயர்ந்தும் உள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5 லட்சம் பேர் ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்கி வருவதாக தெரிகிறது.
சொல்லப் போனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் 12 ஆண்டுகளாக முயற்சித்து பெற்ற வாடிக்கையாளர்களை விட , ரிலையன்ஸ் ஜியோ வெறும் 83 நாட்களிலேயே 50 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது மாபெரும் சாதனையாயக கருதப்படுகிறது.
இந்த சாதனை மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு , பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.