இலவச Amazon Prime சந்தாவுடன் கூடிய Airtel ரீசார்ஜ் பிளான்கள்!

Published : Dec 10, 2022, 10:30 PM ISTUpdated : Dec 10, 2022, 10:35 PM IST
இலவச Amazon Prime சந்தாவுடன் கூடிய Airtel ரீசார்ஜ் பிளான்கள்!

சுருக்கம்

ஏர்டெல் நிறுவனம் இப்போது அமேசான் பிரைமுக்கான இலவச சந்தாவுடன் கூடிய பிளான்களை குறைத்துள்ளது. அதன்படி, ரூ.3359, ரூ.999 மற்றும் ரூ.699 திட்டங்கள் மட்டுமே தற்போது உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அண்மையில் தனது ரீசார்ஜ் பிளான் திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அதில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்து Amazon Prime வீடியோவின் இலவச சந்தாவை நீக்கியுள்ளது. முன்னதாக ஏர்டெல் தனது 4 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்கி வந்தது.  அதில் 2,999 ரூபாய் என்ற திட்டத்தில் இருந்து அமேசான் பிரைம் நீக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு ஏர்டெலின் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடேட் கால், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கியது. அதோடு, வின்க் மியூசிக், 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிலையில், அதிலிருந்து அமேசான் பிரைம் இலவச சந்தா நீக்கப்பட்டுள்ளது. அதன் மற்ற பலன்கள் அப்படியே உள்ளன.

இதையும் படிங்க..மிகக்குறைந்த Samsung Galaxy M04 அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

இப்போது ஏர்டெலில் 3 திட்டங்களில் மட்டுமே அமேசான் பிரைம் வீடியோ சந்தா உள்ளது.  இதில் ரூ.3359, ரூ.999 மற்றும் ரூ.699 திட்டங்களும் அடங்கும். ரூ.3359 திட்டமும் ஒரு வருட வேலிடிட்டி பிளான் ஆகு்ம. அதில் பிரைமுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவும் ஓராண்டுக்கு கிடைக்கும். இதனுடன், அன்லிமிடேட் கால், தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை தினமும் வழங்கப்படுகிறது.

ஏர்டெலின் இந்த மாற்றத்தால், ஏர்டெல் பயனர்கள் இப்போது பிரைம் சந்தா பலன்களை குறைவான திட்டங்களில் மட்டுமே பெறுவார்கள். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப மீதமுள்ள மூன்று திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 

இதற்கு முன்பு இந்த ரீசார்ஜ் பிளான்களில் Disney+ Hotstar சந்தா வழங்கப்பட்டு வந்தன ஆனால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இப்போது Amazon Prime சந்தாவால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏர்டெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் சலுகைகளை ஏர்டெலின் அதிகாரப்பூர்வ இணையதளமான (www.airtel.in) பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இதையும் படிங்க..1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்க எலான் மஸ்க் திட்டம்! லிஸ்டில் உங்கள் கணக்கு உள்ளதா?

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Laptop: புதிய ஆண்டில் லேப்டாப் வாங்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷன்கள்!
2025-ல் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள் இவைதான்!