BMW i7 EV : பில்ட்-இன் சினிமா ஸ்கிரீன் கொண்ட பி.எம்.டபிள்யூ. கார் - வெளியீட்டு விவரம்

By Kevin Kaarki  |  First Published Mar 17, 2022, 9:45 AM IST

BMW i7 EV :  பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் i7 எலெக்ட்ரிக் கார் சர்வதேச வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முற்றிலும் புதிய 7 சீரிஸ் காரை ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய 7 சீரிஸ் கார் பியூர் கம்பஷன், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முதல் முறையாக பியூர் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் ஆல் எலெக்ட்ரிக் EQS செடான் மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல் "தலைசிறந்த டெக் மேஜிக்" என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த மாடலில் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. மேலும் பி.எம்.டபிள்யூ. i7 EV மாடல் ஐந்தாம் தலைமுறை இடிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்த இருக்கிறது. இதே தொழில்நுட்பம் iX எலெக்ட்ரிக் ஆடம்பர எஸ்.யு.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

undefined

இத்துடன் புதிய i7 EV மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஃபிளெக்சிபில் CLAR பிளாட்ஃபார்ம் பயன்படுத்த இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்ம் iX மற்றும் i4 எலெக்ட்ரிக் செடான் மாடல்கள் மற்றும் ICE மாடல்களான சமீபத்திய 2 சீரிஸ் கூப் உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. காரின் பவர்டிரெயின் அம்சங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. முந்தைய பி.எம்.டபிள்யூ. iX எக்ஸ் டிரைவ் 50 மாடலில் உள்ள டூயல் மோட்டார் செட்டப் 516 ஹெச்.பி. திறனஅ வெளிப்படுத்துகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடுகிறது. மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பி.எம்.டபிள்யூ. i7 மாடலிலும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் மோட்டார்களை எதிர்பார்க்கலாம். புதிய 7 சீரிசில் சக்திவாய்ந்த மாடலாக அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் இருக்கும் என பி.எம்.டபிள்யூ. ஏற்கனவே அறிவித்து விட்டது.

புதிய பி.எம்.டபிள்யூ. i7 மாடலின் உள்புறம் 31 இன்ச் அளவில் 8K டிஸ்ப்ளே, OLED தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட இருக்கிறது. இது வேற லெவல் ரியர்-சீட் பொழுதுபோக்கை வழங்கும். இந்த ஸ்கிரீன் ரூஃபினுள் இருந்து வெளியே வருகிறது. அந்த வகையில் இந்த ஸ்கிரீன் பயன்படுத்தாத போது மறைத்து வைத்துக் கொள்ளும் வகையில் காரினுள் பொருத்தப்படுகிறது. 

வேரியண்ட்களை பொருத்தவரை புதிய i7 மாடல் பி.எம்.டபிள்யூ. iX போன்று- எக்ஸ் டிரைவ் 40, எக்ஸ் டிரைவ் 50 மற்றும் M60 என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் டாப் எண்ட் மாடல் 600 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 105.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 629 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். 

புதிய 7 சீரிசின் ICE மாடல்களில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய தலைமுறை என்ஜின்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த என்ஜின்கள் யூரோ 7 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யூரோ 7 புகை விதிகள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 7 சீரிஸ் மாடல்கள் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

click me!