இப்படியே போனால் விற்பனையை தான் நிறுத்தனும்... மாருதி சுசுகி அதிர்ச்சி தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Jun 29, 2022, 7:20 PM IST

இந்திய சந்தையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய கார் மாடல்களில் ஆறு ஏர்பேக் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகிறது.


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடர்ந்து செலவீனங்கள் அதிகரித்து வருவதால், வாகனங்கள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை ஒன்று இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என மிக குறுகிய காலக்கட்டத்திலேயே பல முறை உயர்த்தி வருகின்றன. 

இதையும் படியுங்கள்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 வெர்சிஸ் 650 இந்தியாவில் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், மத்திய அரசின் புது திட்ட அறிவிப்புகள் காரணமாக சிறிய கார்களின் விற்பனை நிறுத்தப்படலாம் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்து இருக்கிறார். தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கும் பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற விதி விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கார்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது என ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: பி.எம்.டபிள்யூ. உடன் சேர்ந்து புது எலெக்ட்ரிக் 2 வீலர் உருவாக்கும் டி.வி.எஸ். - வெளியான சூப்பர் தகவல்..!

இது போன்ற திட்டங்கள் சிறு கார்களை பெருமளவு பாதிக்கும். பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றும் போது ஏற்படும் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். இது போன்ற சூழலில் சிறிய கார்களின் விற்பனையை மாருதி சுசுகி நிறுத்தி விடும். இது மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என தகவல் வெளியானது. 

இதற்கு முற்றிலும் முரணாக மாருதி சுசுகி நிறுவனம் தனது சிறிய கார்கள் லாபம் ஈட்டித் தருவதில்லை என தெரிவித்து இருக்கிறது. "எங்களின் லாபம் சிறிய கார்களை சார்ந்து இருந்தது இல்லை. மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் இருந்து வருகிறது. ஆல்டோ போன்ற மாடல்களை இந்திய சந்தையில் லாபம் இன்றி தான் விற்பனை செய்து வருகிறோம். கார் சந்தையில் இருந்து சிறிய கார்கள் மறைந்தால் இந்திய ஆட்டோமொபைல் துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும்," என ஆர்.சி. பார்கவா மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் கார் மாடல்களில் ஆறு ஏர்பேக் பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஒற்றை நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய சந்தையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய கார் மாடல்களில் ஆறு ஏர்பேக் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகிறது. இது மட்டும் இன்றி புதிய பாரத் NCAP பாதுகாப்பு ரேட்டிங் முறைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கும் ஒற்றை நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது.

click me!