இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jun 29, 2022, 04:48 PM IST
இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

ஸ்கார்பியோ N வெளியாகும் முன்பே மஹிந்திரா நிறுவனம் தனது பழைய ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் அறிமுகமாகும் என அறிவித்து இருந்தது.

மஹிந்திரா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N ஏராளமான புது அம்சங்கள், சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய தலைமுறை ஸ்கார்பியோ N வெளியாகும் முன்பே மஹிந்திரா நிறுவனம் தனது பழைய ஸ்கார்பியோ மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தது. 

இதையும் படியுங்கள்: பி.எம்.டபிள்யூ. உடன் சேர்ந்து புது எலெக்ட்ரிக் 2 வீலர் உருவாக்கும் டி.வி.எஸ். - வெளியான சூப்பர் தகவல்..!

அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் மாடலை முதலில் இரண்டு வேரியண்ட்களிலும் அதன் பின் மற்றொரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் எண்ட்ரி லெவல் மாடல் S வேரியண்ட் என அழைக்கப்பட உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் S11 என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் ஃபுல்லி லோடட் வேரியண்ட் ஆகும். 

இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரத்தில் துவங்குகிறது. அதன் படி புதிய ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் இருந்து துவங்கும் என தெரிகிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் மாடலை 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் 140 ஹெச்.பி. பவர் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்: அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!

இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் கூறப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்காது என கூறப்படுகிறது. ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் ஏராளமான காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. இதன் முன்புற பம்ப்பர் மற்றும் கிரில் புதிதாக வழங்கப்படும். ஸ்கார்பியோ N மாடலில் சிறிய கிரில் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N விலை விவரங்கள்:

2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 பெட்ரோல் மேனுவல் ரூ. 11.99 லட்சம் 
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 டீசல் மேனுவல் ரூ. 12.49 லட்சம் 
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 பெட்ரோல் மேனுவல் ரூ. 13.49 லட்சம்
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 டீசல் மேனுவல் ரூ. 13.99 லட்சம்
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z6 டீசல் மேனுவல் ரூ. 14.99 லட்சம்
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 பெட்ரோல் மேனுவல் ரூ. 16.99 லட்சம் 
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 டீசல் மேனுவல் ரூ. 17.49 லட்சம்
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L பெட்ரோல் மேனுவல் ரூ. 18.99 லட்சம்
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L டீசல் மேனுவல் ரூ. 19.49 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?